ரசிகர்கள், எங்கள் சந்தோசத்திற்காக உயிரையும் கொடுத்து கஷ்டப்படும் கலைஞனுக்கு, எங்கள் விமர்சனங்களை பற்றி தெளிவுபடுத்திவிடுகிறோம்!
திரைவடிவத்தின் இலக்கணங்களை படித்தோ, திரைப்படங்களில் பணியாற்றிய அனுபவத்திலோ ரசனைக்கரானில் திரைப்படம் குறித்த விமர்சனங்கள் எழுதப்படவில்லை.
பிறகு?..
விமர்சனம் எழுத உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது? என்ற கேள்வியெல்லாம் எங்களிடம் கேட்க கூடாது! அது இல்லாதவர்கள் தான் இதுவரை அதிகம் பேர் எழுதிவருகிறார்கள் என்கின்ற அடிப்படைப் பத்திரிகை விதிகளில் சிக்கிகொலாமல் இந்த blogலே எழுதவும் முயற்சித்திருக்கிறோம்!
கண்டிப்பாக திரைப்படங்களுக்கு மார்க் போட்டு மானபங்கப்படுத்த மாட்டோம்! இந்த இடத்தில் இயக்குனர் அமீர் சொன்னது போல நூற்றுக்கு நூறு மார்க் வாங்கும் படம் எடுப்பதை எங்களுக்கு கற்று கொடுங்கள்! என்று ஆனந்த விகடனை (மார்க் போட்டு பிசினஸ் நடத்துவற்காக) அரைந்ததையும் மறக்காமல் நின்னைவில் கொண்டுள்ளோம்.
எங்கள் வேலை சுமைகளையும் தாண்டி, கஷ்ட நஷ்டங்களை மறக்க நீங்கள் காட்டும் கனவுலோகத்தில் கலந்து சந்தோசத்தையும், பல விதமான உணர்வுகளை தேடி, பல சமயம் Blackலே கொள்ளையடிக்கப்பட்டு, உங்கள் திரைப்படைப்பை காண ஓடோடி வருகிறோம்..
ஒரு சராசரியாக வாழும் இந்திய பாமர மக்களின் ரசனையில் வெளிவரும்..
ரசனையாக..
உங்கள் படைப்பு உள்ளத்தை வருடும் உணர்வுபூர்வமகவோ.. அல்லது
எங்கள் அறிவுக்கு எட்டக்கூடிய செய்தியாகவோ இருந்தால்..அல்லது
குறைந்தபட்சம் பொழுதை சந்தோசமாக கழிக்கும் ஜனரஞ்சகமான படமாகவோ இருந்தால்!
அது எங்களுக்கு பிடித்திருந்தால்.. நல்லாயிருக்குன்னு வாழ்த்தி வரவேற்போம்!
இல்லையென்றால்..
எங்களுக்கு பிடிக்கவில்லை! என்ற அடிநாதம் தவறாமல், பூசி மொழுகாமல்..தேவைப்பட்டால் கொஞ்சம் அலசியே கிழிப்போம்!
உங்களுக்கு காசு கொடுக்கும் எஜமானர்கள் என்ற தோரணையில் கண்டிப்பாக இல்லை!
ரசிகர்களாகிய நாங்களும் உங்களில் ஒருவர் என்ற உரிமையில்..
இயங்குனர்களே! நடிகர்களே! இவர்களை இருவரையும் ரசித்து பின்பற்றும் ரசிகர்களே!
தவறாக நாங்கள் விமர்சனம் எழுதி இருந்தால்.. காரணம் சொல்லி எங்களுக்கு புரிய வையுங்கள்.. நாங்களும் புரிந்துக்கொள்ள தயாராக இருக்கிறோம்! ஏனென்றால் நமது மனநிலைகள் மாறுபட்டு இருக்கலாம்! அதற்காக!
எழுதியது பிடித்திருந்தால்.. சிந்திக்கும் அளவுக்கு பெரிதாக நிச்சயம் இருக்காது..
முடிந்தால் விமர்சனங்கள் படித்தும், படமும் நன்றாக இருந்தால் அத்திரைபடத்தை பார்த்தும் ரசியுங்கள்!
நன்றி!
என்றும் அன்புடன்
ரசனைக்கரனுகாக எழுதி கிழிக்க துவங்கும்
உங்கள்
தர டிக்கெட்!