ரசனைக்காரன்

January 6, 2009

புத்தரின் பெயரால்?

Filed under: சினிமா — rasanaikaaran @ 9:49 am
Tags: ,

buddha

“புத்தரின் பெயரால்(in the name of Buddha)”.. இந்த ஆங்கில  திரைப்படம் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது. ஈழத்தில் நடந்தேறி வரும் இன படுகொலைகளையை அப்பட்டமாக காட்சியாக்கி, அதன் அவலங்களையும், வலிகளையும் மையமாக கொண்டது இத்திரைப்படம்.  இது மாதிரி உலக அளவில் சத்யம்  பேசும் படங்கள் எல்லாம்  காங்கிரஸ் கோமாளிகள் பெரியக்கதுக்கு பிடிக்காது அல்லவா! இரண்டு அயல் விருதுகளை பெற்ற “in the name of Buddha”  திரைபடத்தை எடுத்தவர், ஒரு கேரளத்தை சேர்ந்த இந்தியர், பெயர் ராஜேஷ் டச்ரிவேர்.

கதை.. தமிழ் படித்த டாக்டர் சிவா என்பவர் பிரிட்டன் விமான நிலையத்தில் போய் இறங்குகிறார், சரியான சான்றிதழ்களும், தகவல்களும் இல்லாமல் பிரித்தானிய தூதரகத்தில் சிக்கி கொள்கிறார்.. அவரிடம் காரணம் கேட்கும் வயதான தூதரக அதிகாரியின் கண்கள் விரிவடைவது மட்டுமல்ல, நமது கண்களும் அதிர்ச்சியில் நீர்வீழ்ச்சியாகிறது.. ஈழத்தின் கொடுமைகள் காட்சியாகிறது.. கடைசியில்…பிரித்தானிய அரசியல் அகதி என தூதரக அதிகாரி டாக்டர் சிவாவுக்கு அகதிகள் முகாமின் சேர அனுமதி எண் வழங்குகிறார். படம் முடிக்கிறது! நம் மனதில் கவலைகள் மேலும் படர்கிறது!

நான் எழுதி, நீங்கள் படித்து கொண்டு இருக்கும் இந்த வேளையில்லும் ஒரு உயிர் இரத்தம் சிந்தி கொண்டுதானிருக்கும் ஈழத்தில்!

முடிந்தால் படத்தை பார்க்கவும், இல்லையேல் வாய்மொழியாக ஈழத்தில் நடக்கும் அநீதிக்கு எதிராக குரல் கொடுக்கவும்!

ரசனைக்காரனுகாக கனத்த மனதுடன் தர டிக்கெட்!

“புத்தரின் பெயரால்(in the name of Buddha)” படத்தின் சில திரை காட்சிகள்..

Create a free website or blog at WordPress.com.