சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்-பத்மஸ்ரீ கமல்ஹசன் யுகங்களுக்கு பிறகு, (இனிமேல்) இயக்குனர் கைகளில் தான் தமிழ் சினிமா. நாங்கள் சொல்லவில்லை மக்கள் அப்படி நினைக்கிறார்கள். அவ்வாறு இனி வரவிருக்கும் திரைப்படங்களில் ஒரு ரசனைக்காரனாக ஆவலுடன் எதிர்ப்பார்க்கும் படங்கள்..இதோ..
பாலாவின் அவன் இவன்

இந்தப்படத்திற்கு பெருசா விளம்பரமே தேவையில்லை.. பாலா அண்ணாச்சியின் படம்..
மொத்த இந்தியாவே அரள வைக்கும் என்பதில் ஐய்யமில்லை. எழுத்தாளர் ராமகிருஷ்ணனின் வசனத்தில்,
ஆர்தர் வில்சனின் ஒளிப்பதிவில். ஆர்யா, விஷால்,GK,ஜனனி அய்யர்,மது ஷாலினி மற்றும் கௌரவ
தோற்றத்தில் சூர்யாவும் நடிக்கிறார்கள்..யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.
அமீரின் ஆதிபகவன்
அமீர் என்றால் அதுவும் ஒரு புதிய அத்தியாயத்தை உருவாக்கும் …சந்தேகமில்லை!
இந்தப்படத்தில் ஜெயம் ரவி, மம்தா மோகன்தாஸ் நடிக்க, யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.
சீமானின் பகலவன்
அண்ணன் சீமான் சிறையில் இருந்தாலும்..ஈழத்தமிழர்கள் அதிகம் எதிர்நோக்கும் திரைப்படம்.
ஈழத்தின் அவலநிலையை உலகுக்கு பறைசாற்றும் படமாகதான் இருக்கும் என்று அடித்து சொல்லலாம்.
மசாலா படங்களை மீறி விஜய் நடிக்கும் முதல் படம் இது.
சசிகுமாரின் பெயரிடப்படாத அடுத்தப்படம்….வைபவ் , அனன்யா , சமுத்திரகனி , அழகப்பன் நடிக்கிறார்கள்.. அவ்ளோ தான் நமக்கும் தெரியும்.
ஜாலியான SPB.சரண் கூடராத்திலா..இப்படி ஒரு அருமை..என்று திரை முன்னோட்டத்தில் மிரள வைத்திருக்கும் படம். புதியவர் தியாகராஜன் தந்த நம்பிக்கை..இளைஞர் வட்டாரங்களில் அதிகமான பாராட்டையும், ஆதரவையும் பெற்றிருக்கும் சமிபத்திய திரை முன்னோட்டம் இதுவாகத்தான் இருக்கும். இந்த படத்தில் ஹிந்தி நடிகர் ஜக்கி ஷெரிப், ரவி கிருஷ்ணா நடிக்க, யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.
வெற்றிமாறனின் ஆடுகளம்
பொல்லாதவன் கூட்டணியுடன் மீண்டும் வெற்றிமாறன் இறங்கும் களம்.. தொழிநுட்ப கலைஞர்கள் முதற்கொண்டு அதிகமாக எதிர்பார்க்கும் இந்தப்படத்திற்கு GV.பிரகாஷ் குமாரின் இசை.
AR முருகதாஸின் ஏழாம் அறிவு
ஹிந்தி கஜினியின் வெற்றிக்கு பிறகு AR முருகதாஸ் இயக்கம் Sci-Fi வகையான திரைப்படம் ஏழாம் அறிவு.. ரவி கே சந்திரன் ஒளிப்பதிவில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் சூர்யா, சுருதி ஹாசன் முதலியோர் நடிக்கின்றனர்.
சுசீந்தரனின் அழகர்சாமியின் குதிரை
கௌதம் மேனன் எடுக்கும் முதல் திரைப்படம் மன்னிக்கவும் தாயரிக்கும் நல்லப்படம்…நடிகர் அப்புக்குட்டி, சரண்யா நடிக்கும் இந்தப்படத்திற்கு இசைஞானியின் இசை.
செல்வராகவனின் மறவன்
மாலை நேரத்து மயக்கத்தை மாற்றிவிட்டு செல்வராகவனின் அடுத்த முயற்சி.. தனுஷ் நடிக்கும் இந்தப்படத்தில் GV.பிரகாஷ் குமாரின் இசை.
மிஸ்கினின் நந்தலாலா
படம் உலகத்திரையில் தமிழனின் பெருமை பேசப்படும் என்று பார்த்தவர்கள் அனைவரும் சொல்லிவிட்டனர். இசைஞானியின் இசை கலங்க வைக்குமாம். படம் கிகுஜிரோ(kikujiro) தழுவலாக இல்லாமல் இருந்தால் ஆறுதல் தான்.
பிரபு சாலமனின் மைனா…
கமல்ஹாசனும், இயக்குனர் பாலாவும் சர்டிபிக்கேட் கொடுத்திருக்கும் படம்..
காட்சிகளும் பசுமையுடன் ஈர்க்கிறது..
காத்திருக்கிறோம்!
சினிமா என்கிற கலையும் ஒரு ரசனைக்காரனை பொறுத்தவரை ஒரு அழகான காதலுக்கு உரிய எதிர்பார்ப்புகள் தான்.இவற்றில் சில படங்கள் காப்பியங்களாக இருக்கலாம்..எதிர்பார்ப்புகளை ஏமாற்றாமல் இருந்தால் சரி!!
….ரசனைக்காரன்.