ரசனைக்காரன்

March 21, 2013

நவநீதம் பிள்ளை அவர்களை வணங்குகிறோம்!

Filed under: Uncategorized — rasanaikaaran @ 10:40 am
Image
ஜெனிவா தீர்மானத்தில் அமெரிக்க கொண்டுவந்துள்ள
மாற்றம் கொண்ட தீர்மானத்தில் கூட

இலங்கைக்கு பலவகையில் ஆப்பு வைத்திருக்கும்
மேதகு நவநீதம் பிள்ளை அவர்களின் அறிக்கை!

மேதகு நவநீதம் பிள்ளை அவர்களை
வணங்குகிறோம்!
ரசனைக்காரன்

March 20, 2013

மாணவர்களின் புரட்சியில் இன்று இணைகிறோம் – ரசனைக்காரன்

Filed under: Uncategorized — rasanaikaaran @ 10:37 pm

Image

ஈழத்திற்காக போராடி வரும் தமிழக மாணவர்களின் புரட்சியில் இன்று நாங்களும் இணைகிறோம்!

இன்று மார்ச் 21, 2013 உண்ணா நிலைப் போராட்டம் மேற்கொள்ளும்
எங்கள் காரம் சினிமா காப்பி அட்மின்கள்

பவாணி முத்துராமன்  – நியூ யார்க், அமெரிக்கா

சித்தன் சிதம்பரநாதன்  – சென்னை, இந்தியா

சரவணன் சின்னசுவாமி – சென்னை, இந்தியா

தமிழ் குமார் – சிங்கப்பூர்
விஜயகோபலச்வாமி – ஹைதராபாத், இந்தியா
ஹரிஷங்கர் – இங்கிலாந்து
மார்டின் டெக்ஸ்டர்  ஜோசப் – சென்னை, இந்தியா
நந்து நந்தேஷ்சுவரன் – ஓசூர், இந்தியா
ஞானசேகர் BornToAct – ஓசூர், இந்தியா
கார்த்திக் O Positive – சென்னை, இந்தியா
Dongli Jumbo கார்த்திகேயன் – சென்னை, இந்தியா
விஜய் விஸ்வநாத் – சென்னை – இந்தியா
விஜய் பரிஷித் – சென்னை, இந்தியா
விஜய் கே செல்லையா – சென்னை, இந்தியா
அஹமத் கபீர் – ஹைதராபாத், இந்தியா
நந்தகுமார் – கும்பகோணம்,  இந்தியா

அரவிந்த் RV – சென்னை, இந்தியா
மதனிகா – சென்னை, இந்தியா
பவித்ரா – சென்னை, இந்தியா
ஜேசு அருளானந்தம்  – திருச்சி, இந்தியா
இவர்களுடன்
ரசனைக்காரன் என்கிற இளையராஜா வேலுச்சாமி
சிட்னி – ஆஸ்திரேலியா
காரம் சினிமா காப்பி

January 30, 2013

சென்சர் போர்டு – ஏன் இந்த விளங்காத நாடக கம்பெனி?

Filed under: அரசியல்,சினிமா — rasanaikaaran @ 11:06 pm
கமல்ஹாசனின்  விஸ்வரூபம் – 3 மணி நேர சினிமா மக்களை மனமாற்றி விடும், ஆட்சியை  மாற்றி விடும் என்கின்ற  பழைய திராவிட பிரச்சார சினிமா கலாச்சாரத்தில்… இன்றைய தமிழகம் இல்லை!

அதை ஒரு மூணு மணி நேர பொழுதுபோக்காக தான் பார்கின்றனர். தியேட்டரை விட்டு வெளியே வரும் ஒவ்வொரு சினிமா ரசிகனும் புடிச்சிருக்கு… புடிக்கவில்லை என்கின்ற இரு  மனநிலைகளில் மட்டுமே வெளியே வருகின்றான்! அத்துடன் அந்த சினிமாவின் தாக்கம் முடிவடைகிறது!

அதை விட்டுட்டு இன்றும்  கிழக்கிந்திய காலத்தில் அறிமுகம் செய்த… கலைக்கு எதிரான ஒரு பழைய  வன்முறை  கலாச்சாரத்தையும்… தங்களுக்கு ஜால்ரா அடிக்காத… தங்களை எதிர்கின்ற கலைப்படைப்புக்கு,  உடனே தடை என்ற தாராக மந்திரத்தையும்…  இன்று வரை  அமலில் வைத்து அர்ச்சனை செய்து வருகிறீர்கள்! இந்த முறையை சுதந்திரம்  பெற்ற நாள் முதல் மாற்றாமல் தங்கள் சுயநல  பயன்பாட்டுக்காக  வைத்திருப்பது ஆளும் காங்கிரஸ் கோமாளிகள் தான்..  அதனை அந்தந்த மாநில அரசும் தங்கள் சுயநலத்திற்காக பயன்படுத்தி கொள்கிறார்கள்!

கலைக்கு தடை.. அதுவும் இந்தியாவில் நீண்ட நாட்களாக  நடந்தேறிவரும் ஒரு அநியாயம்!

 சென்சர் போர்டு– இந்திய அரசே!… ஏன் இந்த விளங்காத நாடக கம்பெனி?… முதலில் அதனை தடை செய்யவும்!. சரியான வழிகாட்டுதலே இல்லாத ஒரு குறிப்பிட்ட அரசியல் நோக்கங்களுக்காக,   பல ஆண்டுக்காலமாக வியாபாரம் செய்து வருகிறது.

cerser-certificate

அப்படியே இதனை நல்ல முறையில்  தொடர்வது என்றால் –  கலை மற்றும் பல்துறைகளில் சேர்ந்த சிறந்த அறிவாளிகளையும், சிந்தனையாளர்களையும் தேர்ந்தெடுத்து பணியில் அமர்த்துங்கள். அதை விட்டுட்டு ஆட்சிக்கு வந்த கட்சிக்கு நன்கொடை கொடுத்த நகைக்கடை வியாபாரிகளையும், துணிக்கடை முதலாளிகளின் பொண்டாடிகளையும்  மற்றும் பல பலசரக்கு வர்த்தக வியாபாரிகளின் குடும்ப நபர்களை  இந்த சென்சர் போர்டு அமர்த்தினால் கலை என்பது மலிவான வியாபாரமாகி சாக தான் செய்யும்! கலைஞனும் பிச்சை தான் எடுப்பான்!

இந்த சான்றிதல் இருந்தும் மாநில அரசு சட்ட ஒழுங்கு சீர் குலையும் என்று 144 தடை உத்தரவு வழங்கியுள்ளது.  அப்புறம் என்ன  மயித்துக்கு இந்த நாடக கம்பெனியும், அதன் சான்றிதழும்?  இந்த நகைச்சுவை ஒருபுறமிருக்க…

அரசியல் நோக்கில் பார்த்தல் விஸ்வரூபம் பட விவகாரம்  Satellite TVகளின்  வியாபார  நிழல் யுத்தம் என்று கூறிய தெலுங்கு நடிகர் பவன் கல்யாணின் வாக்கு உண்மையே என்று பாமரன் முதற்கொண்டு  இன்று அறிவான்.

கமல்ஹாசன் நாடு போற்றும் கலைஞன்… அவரை இந்தளவுக்கு கீழ்த்தரமாக பந்தாடுவது நியமில்லை. அவரின் படைப்பு புடிக்கவில்லை என்றால் அதனை நம்ம புத்திசாலி மக்களே புறம் தள்ளுவார்கள்!  மாறாக அரசில் இருக்கும் ஒரு கட்சி டிவியின்  வியாபார நோக்கங்களுக்காக  ஒரு கலைஞனையும், அவனது படைப்பையும் தடை செய்து  தனிமை படுத்தாதீர்கள்! பிறகு மீண்டும் தமிழக மக்கள் அரசில் பொறுப்பேற்று இருக்கும் உங்கள் அரசியல் கட்சிக்கு மணி அடித்து விடுவார்கள்!

கலைஞானி கமல்ஹாசன் அவர்களே!… நீங்கள் புத்தியுள்ள ஒரு மாபெரும் கலைஞன்…  சந்தேகமே இல்லை. ஆனால் மக்களின் நம்பிக்கையை மனிதத்துடன்  கொஞ்சம் உங்கள் படைப்புகளில் அணுகுங்கள்.. ஒரு ரசிகனாக இந்த வேண்டுகோள்!

அனைத்து சினிமா ரசிகர்களே.. நாம் அனைவரும் இனி   ஒரு கலைஞனையும், அவனது படைப்பையும்  வாழ வைக்கவோ… போற்றவோ… பாதுகாக்கவோ  வேண்டுமென்றால்  நாம் முக்கியமாக செய்ய வேண்டியது சென்சர் போர்டு என்கின்ற நாடக கம்பெனியை  கலைக்க குரல் கொடுப்பது தான்!

– ரசனைக்காரன்

November 26, 2012

எம் உறவான தலைவனுக்கு.. பிறந்த நாள் நல்வாழ்த்துகள்!

Filed under: அரசியல் — rasanaikaaran @ 10:04 am

August 16, 2012

தமிழ் திரை இயக்குனர்களையும் சினிமா ரசிகர்களையும் பெருமையாக வர்ணிக்கும் அனுராக் கஷ்யப்

Filed under: சினிமா,வீடியோ — rasanaikaaran @ 12:15 pm

தமிழ் திரை இயக்குனர்களின் திறமையையும், தமிழ் சினிமா ரசிகர் ரசனையையும்  பெருமையாக உலகுக்கு உரைக்கும் கேங்ஸ் ஆப் வாஷ்ஹிப்பூரை எடுத்த ஹிந்தி  திரை உலகின்  முன்னணி இயக்குனர் அனுராக் கஷ்யப் – இயக்குனர்கள் பாலா, அமீர், சசிகுமார், வெற்றிமாறன், செல்வராகவன் குறித்து பெருமையாக வர்ணிக்கிறார் | படத்தொகுப்பு Kaaram, Coffee, Cinema! ஜம்போ கார்த்திக் | https://www.facebook.com/rasanaikaaran

August 5, 2012

பாலாஜி சக்திவேலின் வழக்கு எண் 18/9 – மு.ராமசாமின் திறனாய்வு

Filed under: அரசியல்,வீடியோ — rasanaikaaran @ 12:39 am

Edited by Philomin, AROSAM Studio | Videography by Deepak Bhagavanth | Interviewed by Rasanaikaaran

May 8, 2012

வழக்கு எண் 18கீழ்9

Filed under: அரசியல்,சினிமா — rasanaikaaran @ 5:05 am

பிரமாண்ட கமர்சியல் குப்பைகளை கொண்ட இன்றைய தமிழ்சினிமாவின் முகத்தில் வன்மையாக அசிட் வீசியிருக்கிறது எங்கள் வழக்கு  எண் 18கீழ்9 என்கின்ற தமிழ் மக்களின் சினிமா!

பெருமையுடன்…
ரசனைக்காரன்

வழக்கு எண் 18கீழ்9 படத்தின் இயக்குனர் பாலாஜி சக்திவேலின் பேட்டி

Filed under: அரசியல்,சினிமா — rasanaikaaran @ 4:52 am

நன்றி செய்தி தொடர்பாளர் நிகில்

வழக்கு எண் 18கீழ்9 படத்திற்கு கலைத்துறையினரின் பாராட்டுகள்

Filed under: சினிமா — rasanaikaaran @ 4:48 am

இயக்குனர் இமயம் பாரதிராஜா, அறிவுமதி அண்ணன், எடிட்டர் மோகன்  மற்றும் இயக்குனர்கள் ரா பார்த்திபன், செல்வமணி, விக்ரமன், சசி, சமுத்திரகனி, மிஷ்கின், சரவணன் சுப்பையா ராஜா, கௌதம் மேனன், வெங்கடேஷ், அறிவழகன், பசங்க பாண்டியராஜ், இசை அமைப்பாளர்கள் ஹாரிஸ் ஜெயராஜ், விஜய் அந்தோணி   நடிகர்கள் பரத் சிவ கார்த்திகேயன் முதலியோரின் பாராட்டுக்கள் |  நன்றி செய்தி தொடர்பாளர் நிகில்

March 15, 2012

12 வயது பாலச்சந்திரன் கொடூரமாக கொல்லப்படும் காட்சிகள்..வீடியோ வெளியிட்டது சேனல் 4!

Filed under: அரசியல் — rasanaikaaran @ 6:15 am

லண்டன்: இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பான 2வது ஆவணப்படத்தை வெளியிட்டுள்ளது சேனல் 4 நிறுவனம்.


Sri Lanka’s killing fields என்ற பெயரில் கடந்த ஆண்டு ஆவணப் படம் ஒன்றை சேனல் 4 வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதில், இலங்கையின் இனவெறிப் படுகொலைகள் குறித்து பல ஆதாரப்பூர்வமான தகவல்கள் இடம் பெற்றிருந்தன. இந்த நிலையில் தற்போது Sri Lanka’s killing fields: War Crimes Unpunished என்ற பெயரில் இன்னொரு ஆவணப்படம் வெளியாகியுள்ளது.

இதில் ஈழப் போரின் கடைசிக் கட்டத்தில் நடந்த படுகொலைகள், மனித உரிமை மீறல்கள், கொடூரங்கள் குறித்த காட்சிகள் இடம் பெற்றுள்ளன. விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன் படுகொலை செய்யப்பட்டது உள்ளிட்ட பயங்கர காட்சிகளும் இடம் பெற்றுள்ளன.

இந்த வீடியோ ஆவணப் படத்தில் பாலச்சந்திரன் கொடூரமாக கொல்லப்பட்டது, அப்பாவித் தமிழர்களை கொடூரமாக கொன்றது, புதுமாத்தளன் மருத்துவமனையை குண்டு வீசித் தகர்த்தது, போரற்ற பகுதிகளாக அறிவிக்கப்பட்ட இடங்களில் தஞ்சமடைந்த மக்களைக் கொன்று குவித்தது, பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருந்துகள், உணவு தராமல் கொடூரமாக சாக விட்டது உள்ளிட்ட பல்வேறு போர் குற்றச் செயல்களுக்கான ஆதாரங்களை அடுக்கியுள்ளது சேனல் 4.

ஆவணப்படத்தின் இறுதியில், இப்படிப்பட்ட கொடுமைகளுக்கு சர்வதேச சமுதாயம் என்ன தீர்வு காணப்போகிறது, என்ன தண்டனை தரப் போகிறது என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

இலங்கை கொலைக் கள வீடியோக்கள் 

http://www.channel4.com/programmes/sri-lankas-killing-fields/4od#3212461

நன்றி: OneIndia

« Previous PageNext Page »

Create a free website or blog at WordPress.com.