கமல்ஹாசனின் விஸ்வரூபம் – 3 மணி நேர சினிமா மக்களை மனமாற்றி விடும், ஆட்சியை மாற்றி விடும் என்கின்ற பழைய திராவிட பிரச்சார சினிமா கலாச்சாரத்தில்… இன்றைய தமிழகம் இல்லை!
அதை ஒரு மூணு மணி நேர பொழுதுபோக்காக தான் பார்கின்றனர். தியேட்டரை விட்டு வெளியே வரும் ஒவ்வொரு சினிமா ரசிகனும் புடிச்சிருக்கு… புடிக்கவில்லை என்கின்ற இரு மனநிலைகளில் மட்டுமே வெளியே வருகின்றான்! அத்துடன் அந்த சினிமாவின் தாக்கம் முடிவடைகிறது!
அதை விட்டுட்டு இன்றும் கிழக்கிந்திய காலத்தில் அறிமுகம் செய்த… கலைக்கு எதிரான ஒரு பழைய வன்முறை கலாச்சாரத்தையும்… தங்களுக்கு ஜால்ரா அடிக்காத… தங்களை எதிர்கின்ற கலைப்படைப்புக்கு, உடனே தடை என்ற தாராக மந்திரத்தையும்… இன்று வரை அமலில் வைத்து அர்ச்சனை செய்து வருகிறீர்கள்! இந்த முறையை சுதந்திரம் பெற்ற நாள் முதல் மாற்றாமல் தங்கள் சுயநல பயன்பாட்டுக்காக வைத்திருப்பது ஆளும் காங்கிரஸ் கோமாளிகள் தான்.. அதனை அந்தந்த மாநில அரசும் தங்கள் சுயநலத்திற்காக பயன்படுத்தி கொள்கிறார்கள்!
கலைக்கு தடை.. அதுவும் இந்தியாவில் நீண்ட நாட்களாக நடந்தேறிவரும் ஒரு அநியாயம்!
சென்சர் போர்டு– இந்திய அரசே!… ஏன் இந்த விளங்காத நாடக கம்பெனி?… முதலில் அதனை தடை செய்யவும்!. சரியான வழிகாட்டுதலே இல்லாத ஒரு குறிப்பிட்ட அரசியல் நோக்கங்களுக்காக, பல ஆண்டுக்காலமாக வியாபாரம் செய்து வருகிறது.
அப்படியே இதனை நல்ல முறையில் தொடர்வது என்றால் – கலை மற்றும் பல்துறைகளில் சேர்ந்த சிறந்த அறிவாளிகளையும், சிந்தனையாளர்களையும் தேர்ந்தெடுத்து பணியில் அமர்த்துங்கள். அதை விட்டுட்டு ஆட்சிக்கு வந்த கட்சிக்கு நன்கொடை கொடுத்த நகைக்கடை வியாபாரிகளையும், துணிக்கடை முதலாளிகளின் பொண்டாடிகளையும் மற்றும் பல பலசரக்கு வர்த்தக வியாபாரிகளின் குடும்ப நபர்களை இந்த சென்சர் போர்டு அமர்த்தினால் கலை என்பது மலிவான வியாபாரமாகி சாக தான் செய்யும்! கலைஞனும் பிச்சை தான் எடுப்பான்!
இந்த சான்றிதல் இருந்தும் மாநில அரசு சட்ட ஒழுங்கு சீர் குலையும் என்று 144 தடை உத்தரவு வழங்கியுள்ளது. அப்புறம் என்ன மயித்துக்கு இந்த நாடக கம்பெனியும், அதன் சான்றிதழும்? இந்த நகைச்சுவை ஒருபுறமிருக்க…
அரசியல் நோக்கில் பார்த்தல் விஸ்வரூபம் பட விவகாரம் Satellite TVகளின் வியாபார நிழல் யுத்தம் என்று கூறிய தெலுங்கு நடிகர் பவன் கல்யாணின் வாக்கு உண்மையே என்று பாமரன் முதற்கொண்டு இன்று அறிவான்.
கமல்ஹாசன் நாடு போற்றும் கலைஞன்… அவரை இந்தளவுக்கு கீழ்த்தரமாக பந்தாடுவது நியமில்லை. அவரின் படைப்பு புடிக்கவில்லை என்றால் அதனை நம்ம புத்திசாலி மக்களே புறம் தள்ளுவார்கள்! மாறாக அரசில் இருக்கும் ஒரு கட்சி டிவியின் வியாபார நோக்கங்களுக்காக ஒரு கலைஞனையும், அவனது படைப்பையும் தடை செய்து தனிமை படுத்தாதீர்கள்! பிறகு மீண்டும் தமிழக மக்கள் அரசில் பொறுப்பேற்று இருக்கும் உங்கள் அரசியல் கட்சிக்கு மணி அடித்து விடுவார்கள்!
கலைஞானி கமல்ஹாசன் அவர்களே!… நீங்கள் புத்தியுள்ள ஒரு மாபெரும் கலைஞன்… சந்தேகமே இல்லை. ஆனால் மக்களின் நம்பிக்கையை மனிதத்துடன் கொஞ்சம் உங்கள் படைப்புகளில் அணுகுங்கள்.. ஒரு ரசிகனாக இந்த வேண்டுகோள்!
அனைத்து சினிமா ரசிகர்களே.. நாம் அனைவரும் இனி ஒரு கலைஞனையும், அவனது படைப்பையும் வாழ வைக்கவோ… போற்றவோ… பாதுகாக்கவோ வேண்டுமென்றால் நாம் முக்கியமாக செய்ய வேண்டியது சென்சர் போர்டு என்கின்ற நாடக கம்பெனியை கலைக்க குரல் கொடுப்பது தான்!
தமிழ் திரை இயக்குனர்களின் திறமையையும், தமிழ் சினிமா ரசிகர் ரசனையையும் பெருமையாக உலகுக்கு உரைக்கும் கேங்ஸ் ஆப் வாஷ்ஹிப்பூரை எடுத்த ஹிந்தி திரை உலகின் முன்னணி இயக்குனர் அனுராக் கஷ்யப் – இயக்குனர்கள் பாலா, அமீர், சசிகுமார், வெற்றிமாறன், செல்வராகவன் குறித்து பெருமையாக வர்ணிக்கிறார் | படத்தொகுப்பு Kaaram, Coffee, Cinema! ஜம்போ கார்த்திக் | https://www.facebook.com/rasanaikaaran
Filed under: அரசியல்,சினிமா — rasanaikaaran @ 5:05 am
பிரமாண்ட கமர்சியல் குப்பைகளை கொண்ட இன்றைய தமிழ்சினிமாவின் முகத்தில் வன்மையாக அசிட் வீசியிருக்கிறது எங்கள் வழக்கு எண் 18கீழ்9 என்கின்ற தமிழ் மக்களின் சினிமா!
விமர்சனம் எழுதி பெருமை சேர்க்க இங்க நாங்கள் வரவில்லை…படத்தை பார்த்துவிட்டு மனதில் ஏற்பட்டுள்ள பாரத்தை உங்களிடம் இறக்கி வைக்க உங்களிடம் பகிர்ந்துக்கொள்கிறோம்!
இந்த படத்தைப்பற்றி நிறைய்ய பதிவாளர்கள் உணர்வோடு எழுதி இருந்தார்கள்…அதனை கவனிக்காத இந்த தர டிக்கெட்டை முதலில் மன்னிக்கவும்!
விபச்சாரத்திற்காக பெண்களை கடத்தும் கும்பலைப் பற்றியதுதான் கதை. எப்படி பெண்களை கடத்துகிறார்கள்? அவர்களை எங்கு கொண்டு செல்கிறார்கள்? அவர்களுடைய நெட்வொர்க் எப்படி படர்ந்தது என அத்தனை விஷயங்களையும் புட்டு புட்டு வைத்திருக்கிறது ‘ஆண்மை தவறேல்’ படம்.
நன்றி திருமிகு.’ஆண்மை தவறேல்’ இயக்குனர்.குழந்தை.வேலப்பன் அவர்களுக்கு….இந்த படத்தில் பணியாற்றிய அனைத்து நடிகர்கள்… நடிகைகள்…கலைஞர்களுக்கு அனைவருக்கும் எங்கள் நன்றிகள்!…உண்மையில் சமுதாய விழிப்புணர்வு படம் எடித்து இருக்கீங்க இயக்குனர் அவர்களே!
இந்த படத்தை பார்க்காம போனா…அது ஒரு குடும்பத்திற்கு மட்டும் நஷ்டமல்ல…ஒருபெண்ணை பெற்ற தகப்பனுக்கு.. ஒரு நண்பனுக்கு..ஒரு காதலனுக்கு.. ஒரு கணவனுக்கும்..ஏன் ஒரு அழகான வாழ்கையின் கனவுக்கும் நஷ்டம் தான்!
முக்கியமாகா ஒரு பெண்ணுக்கு நஷ்டம் தான்!…தயவு செய்து இது அறிவுரையல்ல..ஒரு நட்புக்கான..ஒரு உணர்வுக்கான பகிர்வு தான்…
பெண்களே..நீங்க சந்தோசமாக அனுபவிக்க வேண்டிய ஒரே ஒரு வாழ்க்கையை..கேவலமான சமுதாயத்தினரான ஒரு பகுதியினரின் சந்தோஷத்திற்காக.. உங்கள் வாழ்கையை… அஜாக்கிரதையினால் முக்கியமா…காதல்..நட்பு…சினிமா… புகழ்… பணம்…பொருளாதாரம்…என்றப் பெயரால் இழந்து விடாதிர்கள்! முதலில் தயவு செய்து இந்த படத்தை பார்க்கவும்!
கவலையுடன்…
தர டிக்கெட்
நன்றி திரு.லோகேஷ் அவர்களுக்கு..அவருடைய காரம், காபி சினிமா பதிர்வை(http://goo.gl/tUWTt) பார்த்தே இந்த பதிவை எழுத ஊந்தியது மனது!