ரசனைக்காரன்

November 19, 2013

காமன் வெல்த் மாநாட்டிற்கு Gold Sponsor Lyca Mobile நிறுவனமே – உன்னையும் சேர்த்து புறக்கணிக்கிறோம்!

Filed under: Uncategorized — rasanaikaaran @ 7:25 am

தமிழர் உலகமே புறக்கணிக்கும் காமன் வெல்த் மாநாட்டிற்கு,  தமிழர்களையே மூலதனமாகக் கொண்ட  #லைக்கா நிறுவனமே, என் கையை வைத்து என் கண்ணையே குத்துகின்றாயா..?  உன்னையும் சேர்த்து புறக்கணிக்கிறோம்!

Untitled-1

இலங்கைத்தீவில் பாரிய மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றுள்ளதால், அங்கு நடைபெறும் பொதுநலவாய மாநாட்டையும், அதனையொட்டிய முதலீடு தொடர்பான வர்த்தக மாநாட்டையும் (pre-summit Commonwealth Business Forum) புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கை மனித உரிமை அமைப்புக்களாலும், தமிழ் தலைவர்களாலும் முன்வைக்கப்பட்டு வருகின்றது.

இவ்வாறான நிலையில், தமிழ் மக்களின் நிதிப்பங்களிப்பில் பாரிய நிறுவனமாக வளர்ந்துள்ள பிரித்தானியாவைத் தளமாகக்கொண்டியங்கும் லைக்கா மொபைல் நிறுவனம், போர்க்குற்றம் புரிந்த சிறீலங்கா அரசாங்கத்திற்கு அங்கீகாரம் வழங்கும் பொதுநலவாய மாநாட்டிற்கு நிதியுதவி வழங்கியுள்ளமை அம்பலத்திற்கு வந்துள்ளது.

உலகத் தலைவர்கள் இந்த மாநாட்டைப் புறக்கணிக்க வேண்டும் என, பழ.நெடுமாறன், வைகோ உட்பட தமிழக தலைவர்களும், பிரித்தானிய தமிழர் பேரவை, உலகத் தமிழர் பேரவை போன்ற பல புலம்பெயர்ந்த அமைப்புக்களும் தொடர்ச்சியாகக் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், இந்த மாநாட்டின் முன்னணி (Gold Sponsor) நிதியுதவி நிறுவனமாக லைக்கா குழுமம் திகழ்கின்றது.

http://www.corporatewatch.org.uk/?lid=5128

இலங்கைத்தீவில் பாரிய மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றுள்ளதால், அங்கு நடைபெறும் பொதுநலவாய மாநாட்டையும், அதனையொட்டிய முதலீடு தொடர்பான வர்த்தக மாநாட்டையும் (pre-summit Commonwealth Business Forum) புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கை மனித உரிமை அமைப்புக்களால் முன்வைக்கப்பட்டு வருகின்றது.

பிரித்தானியாவைச் சேர்ந்த நூறிற்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கொழும்பில் தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ‘இலங்கையில் வர்த்தக முதலீடு’ செய்வது பற்றிய மாநாட்டில் கலந்து கொண்டுள்ளன.

கொழும்பு சென்றுள்ள நிறுவனங்களில் தமிழ் மக்களின் நிதிப்பங்களிப்பில் ஐரோப்பிய நாடுகள் மற்றும் அவுஸ்திரேலியாவில் பெரும் இலாபம் ஈட்டிவரும் லைக்கா மொபைல் (Lyca Mobile), லைக்கா ரெல் (Lyca Tel) மற்றும் லைக்கா ஃபிளை (Lyca Fly) போன்ற நிறுவனங்களைக் கொண்ட லைக்கா குழுமமும் (Lyca Group) ஒரு முக்கிய நிதியுதவியாளராக அடங்கியுள்ளமை பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அத்துடன், பொதுநலவாய மாநாட்டிற்கும் லைக்கா குழுமம் நிதியுதவி வழங்கியிருக்கின்றது.

கனடா, இந்தியா, மற்றும் மொறீசியஸ் போன்ற நாடுகளின் பிரதமர்கள் கொழும்பு மாநாட்டைப் புறக்கணித்துள்ள நிலையில், பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமறூன் தமிழ் மக்களின் எதிர்ப்பின் மத்தியில் நாளை (15-11-2013) கொழும்பு செல்லுகின்றார். இதனையொட்டி பிரித்தானிய ஆளும் கட்சிக்கு நிதியுதவி செய்யும் நிறுவனங்கள் கடந்த 12ஆம் திகதி முதல் இன்றுவரை நடைபெறும் வர்த்தக முதலீட்டு மாநாட்டில் கலந்து கொண்டுள்ளன.

இதற்கென கொழும்பு சென்ற லைக்கா மொபைல் உட்பட வர்த்தக நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கு மிகச்சிறந்த வரவேற்பளித்த சிறீலங்கா அரசாங்கம், அவர்களை கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து உலங்கு வானூர்திகளில் அழைத்துச் சென்று மிகவும் இராஜ மரியாதை வழங்கியுள்ளது. இதில் லைக்கா மொபைல் நிறுவனத்தின் தலைவர் சுபாஸ்கரன் அல்லிராஜாவும் அடங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிதியுதவி மாநாடு பற்றிக் கருத்துரைத்த சர்வதேச மன்னிப்புச் சபையின் இயக்குனர் கேட் அலென் (Kate Allen), பாரிய மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட ராஜபக்சவிற்கும், அவரது அரசாங்கத்திற்கும் இந்த வர்த்தக மாநாடு, முதலீட்டிற்கான வாய்ப்பாக அமைந்துவிடக்கூடாது என எச்சரிக்கை செய்துள்ளார். ஆனால் இரண்டு பில்லியன் அமெரிக்க டொலருக்கு மேற்பட்ட முதலீடு ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுள்ளது.

http://www.corporatewatch.org.uk/?lid=5126

கொழும்பு வர்த்தக மாநாட்டில் கலந்து கொண்டுள்ள நிறுவனங்கள் பற்றிய தகவல்களை பிரித்தானியாவின் ஆய்வு ஊடகமான கோர்பறேட் வொச் (Corporate Watch) வெளியிட்டுள்ளது. இதில் லைக்கா மொபைல் முக்கிய இடத்தில் (Gold Sponsor) இருப்பதை மேலுள்ள இணையத்தின் இணைப்பில் பார்வையிடலாம். லைக்கா மொபைல் நிறுவனத்தின் கணக்காய்வு நிறுவனமான ஏன்ஸ் அன்ட் யங் (Ernst & Young) நிறுவனமும் கொழும்பு சென்றுள்ளது. அத்துடன், பிரித்தானியாவில் தமிழ் மக்கள் பெருமளவில் பாவிக்கும் வீட்டுத் தொலைபேசிச் சேவை நிறுவனமான பி.ரியும் (BT) இதில் அடங்கியுள்ளது.

தமிழரின் நிறுவனமான லைக்கா மொபைல் நிறுவனம் பிரித்தானிய ஆளும் கட்சிக்கு இதுவரை 426,293.00 பவுண்ஸ்களை நிதிப்பங்களிப்பாக வழங்கி, அந்தக் கட்சிக்கு நிதி வழங்கும் நிறுவனங்களில் மூன்றாவது இடத்தில் உள்ளது. ஆனால் 2005ஆம் ஆண்டு முதல் இதுவரை பிரித்தானியாவில் வரி செலுத்தவில்லை என கடந்த சில மாதங்களுக்கு முன்னர் லண்டனின் முன்னணி ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தமை தமிழ் மக்களிற்கு பெரும் ஏமாற்றத்தையும், சங்கடத்தையும் ஏற்படுத்தி இருந்தது.

http://searchthemoney.com/profile/657/2970

http://www.theguardian.com/politics/2012/jun/04/lycamobile-tories-biggest-corporate-donor

http://www.mobilenewscwp.co.uk/2012/04/25/lyca-in-trouble-over-late-accounts-and-political-donations/

இதேவேளை, புலம்பெயர்ந்த தமிழ் மக்களின் பெரும் நிதிப்பங்களிப்பில் வளர்ந்த லைக்கா குழுமம், போர்த்துக்கல்லில் உள்ள தனது இணை நிறுவனமான  Hastings Trading e Serviços Lda ஊடாக மகிந்த ராஜபக்சவின் மருமகனான ஹிமால் லலிந்த ஹெட்டியாராச்சியின் (Himal Lalindra Hettiarachchi) பெயரிலுள்ள சிறீலங்காவின் வயர்லெஸ் சேவை வழங்கும் நிறுவனத்தின் 95 வீதமான பங்கை 2007ஆம் ஆண்டு கொள்வனவு செய்துள்ளமையும் இப்பொழுது தெரிய வந்துள்ளது. மகிந்தவின் மருமகனின் இந்த நிறுவனத்துடன் 100 மில்லியன் அமெரிக்க டொலர் நட்டத்தில் இணைந்து செயற்பட வேண்டிய நிர்பந்தத்திற்கு சிறீலங்கா ரெலிகொம் தள்ளப்பட்டுள்ளது.

http://www.thesundayleader.lk/2009/11/29/slt’s-wimax-cross-connection/

இதேவேளை, லைக்கா குழுமத்தின் லைக்கா ஃபிளை (Lyca Fly) நிறுவனமும், பாரிய மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட சிறீலங்கா அரசாங்கத்திற்கு பெரும் வருவாயை ஈட்டிக்கொடுக்கும், மகிந்தவின் மைத்துனரின் பெயரிலுள்ள சிறீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இயங்கி வருகின்றது. அத்துடன், சிறீலங்காவிற்கு செல்லுவதற்காக சுற்றுலாச் சலுகைகளையும் லைக்கா ஃபிளை (Lyca Fly) போருக்குப் பின்னர் வழங்கி வருவதால், சிறீலங்கா அரசாங்கம் அதனூடாகவும் அந்நியச் செலாவணியைப் பெற்று வருகின்றது.

http://www.lycaflyholidays.com/destinations/indian_sub_continent/srilanka.html

இந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக பதிலளிக்க லைக்கா குழுமம் மறுப்புத் தெரிவித்து வருகின்றது.

எந்தவித பிரதிபலனையும் எதிர்பார்க்காது சனல்-4 போன்ற ஊடகங்கள் தமிழ் மக்களிற்காகவும், மனித உரிமைகளுக்காவும் குரல் கொடுத்து வரும் நிலையில், தமிழ் மக்களின் பணத்தில் வளர்ந்த லைக்கா குழுமம், அந்த மக்களைக் கொன்றொழித்து, போர்க்குற்றம் புரிந்த அரசாங்கத்திற்கு நிதியுதவி வழங்கி வருகின்றமை ஏற்க முடியாத ஒரு விடயம்.

போரில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் தற்பொழுதும் அடிப்படை வசதிகள் அற்ற நிலையில் அவலப்பட்டு வருகின்றனர். வெளிநாட்டு அரசாங்கங்களும், தொண்டு நிறுவனங்களும் பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளிற்கான அவசர உதவிகளில் மூழ்கியுள்ளன. இந்த நிலையில் தமிழ் மக்களின் பணத்தில் புலம்பெயர் நாடுகளில் வளர்ந்த லைக்கா மொபைல் போன்ற நிறுவனங்கள், தாயகத்தில் அவலப்படும் மக்களை கவனிக்க வேண்டிய பொறுப்பில் இருந்து விலக முடியாது. தவறினால் இவ்வாறான அமைப்புக்களிற்கு பதிலடி கொடுக்க புலம்பெயர்ந்த மக்கள் பின்னிற்க மாட்டார்கள் என்பது உறுதி.

lyca-mobile-sponsor

கனடா, இந்தியா, மற்றும் மொறீசியஸ் போன்ற நாடுகளின் பிரதமர்கள் கொழும்பு மாநாட்டைப் புறக்கணித்துள்ள நிலையில், மகிந்த ராஜபக்சவிற்கு அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு தலைவர் பதவியை வழங்கி, உலகத் தலைவர்கள் மத்தியில் பெரும் மதிப்பை ஈட்டிக்கொடுக்கும் பொதுநலவாய மாநாட்டிற்கு தமிழ் நிறுவனம் ஒன்று முன்னணி நிதி அன்பளிப்புச் செய்யும் நிலையில் இருப்பது தமிழ் மக்களிற்கு வெட்கக்கேடான விடயமாகும்.

சனல்-4, பி.பி.சி உட்பட ஐரோப்பிய, கனடிய, அவுஸ்திரேலிய ஊடகங்கள், லண்டனை தளமாகக் கொண்ட சர்வதேச மன்னிப்புச்சபை, நியூயோர்க்கை தளமாகக்கொண்ட மனித உரிமைகள் கண்காணிப்பகம் போன்ற மனித உரிமை அமைப்புக்கள், கொழும்பு மாநாட்டைப் புறக்கணிக்க வேண்டும் என உலக நாடுகளிடம் தொடர்ச்சியாகக் கோரிக்கை விடுத்துவரும் நிலையில், தமிழ் நிறுவனம் ஒன்று இந்த மாநாட்டிற்கு நிதியுதவி வழங்கியுள்ளமை உலகத் தமிழர்களை தலைகுனிய வைத்துள்ளது.

தமிழ் மக்களால் வளர்த்தெடுக்கப்பட்ட இவ்வாறான நிறுவனங்கள், தமிழ் மக்களில் நலன் சார்ந்து செயற்படத் தவறி வருகின்றமை தொடர்பாக, புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் சிந்தித்துச் செயலாற்றாது விட்டதன் விளைவே இன்றைய இந்த நிலைக்குக் காரணமாகும் என தமிழ் ஆர்வலர்கள் ஆதங்கம் தெரிவித்துள்ளனர்.

உசாத்துணைப் பக்கங்கள்:

http://www.corporatewatch.org.uk/?lid=5126

http://www.theguardian.com/politics/2012/jun/04/lycamobile-tories-biggest-corporate-donor

http://www.mobilenewscwp.co.uk/2012/04/25/lyca-in-trouble-over-late-accounts-and-political-donations/

http://www.thesundayleader.lk/2009/11/29/slt’s-wimax-cross-connection/

http://www.theguardian.com/politics/2012/apr/23/tories-third-largest-donor-tax

http://www.norwaytoday.info/money_view.php?id=7641

http://searchthemoney.com/profile/657/2970

http://www.lycaflyholidays.com/destinations/indian_sub_continent/srilanka.html

Create a free website or blog at WordPress.com.