காதலுக்கும், கவிதைக்கும் வயதில்லை
வாலிபம் பேசும் இதயம் மட்டுமே என
காலத்தையே சிறையில் அடைத்து
பேசியது… பேசுக்கின்றது…பேசும்…உன் வரிகள் !
உனக்கும் .. உன் வயதிற்கும்
பயணக் களைப்பு இருக்கும்
அதனால் தான் நீ தற்காலிகமாக
உறங்க சென்று இருக்கிறாய்!
அது வரை நாங்கள் உன் பொய்யான தமிழ் வரிகளோடு
“நான் உனை நீங்க மாட்டேன்
நீங்கினால் தூங்கமாட்டேன்
சேர்ந்ததே நம் ஜீவனே!”
அன்புடன்
உன்னை ரசிக்கும்
ரசனைக்காரன்