அந்த ஊரில் ஆகச் சிறந்த வசதிகள் இல்லை; மிகப் பெரிய மைதானம் இல்லை; கற்றுத்தரப் பயிற்சியாளரும் இல்லை. ஆனால், நம்புங்கள் அந்தக் கிராமத்தில் இருந்துதான் இந்தியக் கபடி அணியின் கேப்டன் வந்தார். அந்தக் கிராமத்தில் இருந்து சென்ற கால்கள் ஒலிம்பிக் வரை தடம் பதித்தன. அந்தக் கிராமத்தைச் சேர்ந்த பலர் தேசிய சாம்பியன்கள். அந்தக் கிராமத்தில் கிட்டத்தட்ட வீட்டுக்கு ஒருவர் ‘ஸ்போர்ட்ஸ் கோட்டா’வில் அரசு வேலை பெற்றிருக்கிறார்கள். விளையாட்டை மூலதனமாகவைத்து மொத்தக் கிராமத்தையும் முன்னேற்றத் திசையில் கொண்டுசெல்ல முடியும் என்று நிரூபித்திருக்கும் அந்த ஊர்… வடுவூர்!
தஞ்சாவூரில் இருந்து மன்னார்குடி செல்லும் சாலையில் இருக்கும் வடுவூர், விளையாட்டு வீரர்களின் சொர்க்கபுரி.
நன்றி விகடன்!
Like & Share
https://www.facebook.com/rasanaikaaran