ரசனைக்காரன்

January 30, 2013

சென்சர் போர்டு – ஏன் இந்த விளங்காத நாடக கம்பெனி?

Filed under: அரசியல்,சினிமா — rasanaikaaran @ 11:06 pm
கமல்ஹாசனின்  விஸ்வரூபம் – 3 மணி நேர சினிமா மக்களை மனமாற்றி விடும், ஆட்சியை  மாற்றி விடும் என்கின்ற  பழைய திராவிட பிரச்சார சினிமா கலாச்சாரத்தில்… இன்றைய தமிழகம் இல்லை!

அதை ஒரு மூணு மணி நேர பொழுதுபோக்காக தான் பார்கின்றனர். தியேட்டரை விட்டு வெளியே வரும் ஒவ்வொரு சினிமா ரசிகனும் புடிச்சிருக்கு… புடிக்கவில்லை என்கின்ற இரு  மனநிலைகளில் மட்டுமே வெளியே வருகின்றான்! அத்துடன் அந்த சினிமாவின் தாக்கம் முடிவடைகிறது!

அதை விட்டுட்டு இன்றும்  கிழக்கிந்திய காலத்தில் அறிமுகம் செய்த… கலைக்கு எதிரான ஒரு பழைய  வன்முறை  கலாச்சாரத்தையும்… தங்களுக்கு ஜால்ரா அடிக்காத… தங்களை எதிர்கின்ற கலைப்படைப்புக்கு,  உடனே தடை என்ற தாராக மந்திரத்தையும்…  இன்று வரை  அமலில் வைத்து அர்ச்சனை செய்து வருகிறீர்கள்! இந்த முறையை சுதந்திரம்  பெற்ற நாள் முதல் மாற்றாமல் தங்கள் சுயநல  பயன்பாட்டுக்காக  வைத்திருப்பது ஆளும் காங்கிரஸ் கோமாளிகள் தான்..  அதனை அந்தந்த மாநில அரசும் தங்கள் சுயநலத்திற்காக பயன்படுத்தி கொள்கிறார்கள்!

கலைக்கு தடை.. அதுவும் இந்தியாவில் நீண்ட நாட்களாக  நடந்தேறிவரும் ஒரு அநியாயம்!

 சென்சர் போர்டு– இந்திய அரசே!… ஏன் இந்த விளங்காத நாடக கம்பெனி?… முதலில் அதனை தடை செய்யவும்!. சரியான வழிகாட்டுதலே இல்லாத ஒரு குறிப்பிட்ட அரசியல் நோக்கங்களுக்காக,   பல ஆண்டுக்காலமாக வியாபாரம் செய்து வருகிறது.

cerser-certificate

அப்படியே இதனை நல்ல முறையில்  தொடர்வது என்றால் –  கலை மற்றும் பல்துறைகளில் சேர்ந்த சிறந்த அறிவாளிகளையும், சிந்தனையாளர்களையும் தேர்ந்தெடுத்து பணியில் அமர்த்துங்கள். அதை விட்டுட்டு ஆட்சிக்கு வந்த கட்சிக்கு நன்கொடை கொடுத்த நகைக்கடை வியாபாரிகளையும், துணிக்கடை முதலாளிகளின் பொண்டாடிகளையும்  மற்றும் பல பலசரக்கு வர்த்தக வியாபாரிகளின் குடும்ப நபர்களை  இந்த சென்சர் போர்டு அமர்த்தினால் கலை என்பது மலிவான வியாபாரமாகி சாக தான் செய்யும்! கலைஞனும் பிச்சை தான் எடுப்பான்!

இந்த சான்றிதல் இருந்தும் மாநில அரசு சட்ட ஒழுங்கு சீர் குலையும் என்று 144 தடை உத்தரவு வழங்கியுள்ளது.  அப்புறம் என்ன  மயித்துக்கு இந்த நாடக கம்பெனியும், அதன் சான்றிதழும்?  இந்த நகைச்சுவை ஒருபுறமிருக்க…

அரசியல் நோக்கில் பார்த்தல் விஸ்வரூபம் பட விவகாரம்  Satellite TVகளின்  வியாபார  நிழல் யுத்தம் என்று கூறிய தெலுங்கு நடிகர் பவன் கல்யாணின் வாக்கு உண்மையே என்று பாமரன் முதற்கொண்டு  இன்று அறிவான்.

கமல்ஹாசன் நாடு போற்றும் கலைஞன்… அவரை இந்தளவுக்கு கீழ்த்தரமாக பந்தாடுவது நியமில்லை. அவரின் படைப்பு புடிக்கவில்லை என்றால் அதனை நம்ம புத்திசாலி மக்களே புறம் தள்ளுவார்கள்!  மாறாக அரசில் இருக்கும் ஒரு கட்சி டிவியின்  வியாபார நோக்கங்களுக்காக  ஒரு கலைஞனையும், அவனது படைப்பையும் தடை செய்து  தனிமை படுத்தாதீர்கள்! பிறகு மீண்டும் தமிழக மக்கள் அரசில் பொறுப்பேற்று இருக்கும் உங்கள் அரசியல் கட்சிக்கு மணி அடித்து விடுவார்கள்!

கலைஞானி கமல்ஹாசன் அவர்களே!… நீங்கள் புத்தியுள்ள ஒரு மாபெரும் கலைஞன்…  சந்தேகமே இல்லை. ஆனால் மக்களின் நம்பிக்கையை மனிதத்துடன்  கொஞ்சம் உங்கள் படைப்புகளில் அணுகுங்கள்.. ஒரு ரசிகனாக இந்த வேண்டுகோள்!

அனைத்து சினிமா ரசிகர்களே.. நாம் அனைவரும் இனி   ஒரு கலைஞனையும், அவனது படைப்பையும்  வாழ வைக்கவோ… போற்றவோ… பாதுகாக்கவோ  வேண்டுமென்றால்  நாம் முக்கியமாக செய்ய வேண்டியது சென்சர் போர்டு என்கின்ற நாடக கம்பெனியை  கலைக்க குரல் கொடுப்பது தான்!

– ரசனைக்காரன்

Create a free website or blog at WordPress.com.