ரசனைக்காரன்

March 15, 2012

12 வயது பாலச்சந்திரன் கொடூரமாக கொல்லப்படும் காட்சிகள்..வீடியோ வெளியிட்டது சேனல் 4!

Filed under: அரசியல் — rasanaikaaran @ 6:15 am

லண்டன்: இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பான 2வது ஆவணப்படத்தை வெளியிட்டுள்ளது சேனல் 4 நிறுவனம்.


Sri Lanka’s killing fields என்ற பெயரில் கடந்த ஆண்டு ஆவணப் படம் ஒன்றை சேனல் 4 வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதில், இலங்கையின் இனவெறிப் படுகொலைகள் குறித்து பல ஆதாரப்பூர்வமான தகவல்கள் இடம் பெற்றிருந்தன. இந்த நிலையில் தற்போது Sri Lanka’s killing fields: War Crimes Unpunished என்ற பெயரில் இன்னொரு ஆவணப்படம் வெளியாகியுள்ளது.

இதில் ஈழப் போரின் கடைசிக் கட்டத்தில் நடந்த படுகொலைகள், மனித உரிமை மீறல்கள், கொடூரங்கள் குறித்த காட்சிகள் இடம் பெற்றுள்ளன. விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன் படுகொலை செய்யப்பட்டது உள்ளிட்ட பயங்கர காட்சிகளும் இடம் பெற்றுள்ளன.

இந்த வீடியோ ஆவணப் படத்தில் பாலச்சந்திரன் கொடூரமாக கொல்லப்பட்டது, அப்பாவித் தமிழர்களை கொடூரமாக கொன்றது, புதுமாத்தளன் மருத்துவமனையை குண்டு வீசித் தகர்த்தது, போரற்ற பகுதிகளாக அறிவிக்கப்பட்ட இடங்களில் தஞ்சமடைந்த மக்களைக் கொன்று குவித்தது, பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருந்துகள், உணவு தராமல் கொடூரமாக சாக விட்டது உள்ளிட்ட பல்வேறு போர் குற்றச் செயல்களுக்கான ஆதாரங்களை அடுக்கியுள்ளது சேனல் 4.

ஆவணப்படத்தின் இறுதியில், இப்படிப்பட்ட கொடுமைகளுக்கு சர்வதேச சமுதாயம் என்ன தீர்வு காணப்போகிறது, என்ன தண்டனை தரப் போகிறது என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

இலங்கை கொலைக் கள வீடியோக்கள் 

http://www.channel4.com/programmes/sri-lankas-killing-fields/4od#3212461

நன்றி: OneIndia

March 3, 2012

வசந்தபாலனின் அரவான் – ரசனைக்காரன் திரை விமர்சனம்

Filed under: சினிமா — rasanaikaaran @ 2:48 pm

Follow Rasanaikaaran Facebook Page: https://www.facebook.com/rasanaikaaran
and
Follow Rasanaikaaran’s Popular Commercial Space in Facebook:

Kaaram, Coffee, Cinema!


Blog at WordPress.com.