ரசனைக்காரன்

July 4, 2011

‘ஆண்மை தவறேல்’ என்கின்ற இந்த படம்..

Filed under: சினிமா — rasanaikaaran @ 12:40 pm

விமர்சனம் எழுதி பெருமை சேர்க்க இங்க நாங்கள் வரவில்லை…படத்தை பார்த்துவிட்டு மனதில் ஏற்பட்டுள்ள பாரத்தை உங்களிடம் இறக்கி வைக்க உங்களிடம் பகிர்ந்துக்கொள்கிறோம்!
இந்த படத்தைப்பற்றி நிறைய்ய பதிவாளர்கள் உணர்வோடு எழுதி இருந்தார்கள்…அதனை கவனிக்காத இந்த தர டிக்கெட்டை முதலில் மன்னிக்கவும்!

இந்த படத்துல்ல…

காதல் என்றப் பெயரால் …

நட்பு என்றப் பெயரால் …

சினிமா… வேலை…புகழ்பணம்என்றப் பெயரால்

பொருளாதாரம் என்ற சூழ்ச்சியின்  பெயரால் ..உங்களை அறியாமல்

உங்கள் வீட்டுப் பெண் பாதிக்கப் படலாம்ஏன் நம்ம வீட்டுப் பெண்ணும்?

அதனை காப்பது நமது நாட்டின் கடமையல்ல..

நமது உயிரை(பெண்ணை) காப்பது… நமது கடமை மட்டுமே தான்!

தயவு செய்து…தயவு தாட்சாண்யம் இன்றி உங்கள் வீட்டு பெண்ணை சந்தேகப் படுங்கள்

உங்களுக்கு சந்தேகப்படும்படி நடந்தால்!

‘ஆண்மை தவறேல்’  என்கின்ற இந்த படம்..

விபச்சாரத்திற்காக பெண்களை கடத்தும் கும்பலைப் பற்றியதுதான் கதை. எப்படி பெண்களை கடத்துகிறார்கள்? அவர்களை எங்கு கொண்டு செல்கிறார்கள்? அவர்களுடைய நெட்வொர்க் எப்படி படர்ந்தது என அத்தனை விஷயங்களையும் புட்டு புட்டு வைத்திருக்கிறது ‘ஆண்மை தவறேல்’ படம்.

நன்றி திருமிகு.’ஆண்மை தவறேல்’ இயக்குனர்.குழந்தை.வேலப்பன் அவர்களுக்கு….இந்த படத்தில் பணியாற்றிய அனைத்து நடிகர்கள்… நடிகைகள்…கலைஞர்களுக்கு அனைவருக்கும்  எங்கள் நன்றிகள்!…உண்மையில் சமுதாய விழிப்புணர்வு படம் எடித்து இருக்கீங்க இயக்குனர் அவர்களே!

இந்த படத்தை  பார்க்காம போனா…அது ஒரு குடும்பத்திற்கு மட்டும் நஷ்டமல்ல…ஒருபெண்ணை பெற்ற  தகப்பனுக்கு.. ஒரு நண்பனுக்கு..ஒரு காதலனுக்கு.. ஒரு கணவனுக்கும்..ஏன் ஒரு அழகான வாழ்கையின் கனவுக்கும் நஷ்டம் தான்!

முக்கியமாகா ஒரு பெண்ணுக்கு நஷ்டம் தான்!…தயவு செய்து இது அறிவுரையல்ல..ஒரு நட்புக்கான..ஒரு உணர்வுக்கான  பகிர்வு தான்…

பெண்களே..நீங்க சந்தோசமாக அனுபவிக்க வேண்டிய ஒரே ஒரு வாழ்க்கையை..கேவலமான சமுதாயத்தினரான ஒரு பகுதியினரின் சந்தோஷத்திற்காக.. உங்கள் வாழ்கையை… அஜாக்கிரதையினால் முக்கியமா…காதல்..நட்பு…சினிமா… புகழ்… பணம்…பொருளாதாரம்…என்றப் பெயரால் இழந்து விடாதிர்கள்!  முதலில் தயவு செய்து இந்த படத்தை பார்க்கவும்!

கவலையுடன்…

தர டிக்கெட்

நன்றி திரு.லோகேஷ் அவர்களுக்கு..அவருடைய காரம், காபி சினிமா பதிர்வை(http://goo.gl/tUWTt) பார்த்தே இந்த பதிவை எழுத  ஊந்தியது மனது!

*-இந்த பகுதி முழுவதும் பக்கத்தில் கடன்வாங்கியது

Create a free website or blog at WordPress.com.