சமிபத்தில் பார்த்த பல டிவி பேட்டிகள் பார்த்து பொறுக்க முடியாமல்…இந்த பதிவை எழுதுகிறேன்!!
வணக்கம் அண்ணாச்சி..அத்தாட்ச்சி…..நான் தான் உங்க தர டிக்கெட்டு..நல்லா இருக்கீகளா?
சரி விஷயத்துக்கு வாரேன்!
மக்களை முட்டாள்ளுனும்…
அவர்களுக்கு சினிமாவைப் பற்றி ஒன்னுமே தெரியாதுனும்..
அதனால் தான் நாங்க உலகசினிமாவை அவர்களுக்கு அறிய வைக்க…
அவர்கள் ரசனைகளை உலகதரத்துக்கு மாற்ற…
ஒரு படத்த எடுத்திருக்கோம்னு (அவர்கள் எடுத்த ஜெராக்ஸ் உலகசினிமாவை) ப்ரோமோட் பண்ணாமல்,
பில்ட்-அப் கட்டிடங்கள் கட்டாமல்..
இன்னமும் கலை வல்லமை படைத்த பல தமிழ் இயக்குனர்கள் நம்மிடத்தில் இருக்கிறார்கள்.
அவர்கள் இதுவரை எடுத்திருக்கின்ற ஒரு படத்தை இந்த அரவேக்காட்டு கும்பல் (கௌதம் மேனன், மிஷ்கின், சில சமயம் சேரனே) மாதிரி, அதன் அருமை பெருமைகளை அவர்கள் தெரு தெருவாய்ப் போய் முச்சந்திகளில் குலைப்பதில்லை.. மாறாக தங்கள் படைப்புகளினால் மக்களின் மனதுகளில் உணர்வாக பதிவாகிறார்கள்!
டேய் அரவேக்காடுகளா!
உருப்படியான சினிமாவை முதல்ல நீங்க எடுங்க…மக்களுக்கு புடிச்சிருந்த அவங்களே ப்ரோமோட் பண்ணுவாங்க.. சும்மா நைய் நைய்யின்னு!! (இத விளம்பரப் படுத்த ஒரு ‘தர’ + ‘மான’ நட்சத்திர டிவி வேறு?!)
அப்படியான்னு உங்க அறியாமையால்… நீங்க என்ன கேட்டா…?
அப்படி தான் மக்களே சொன்னங்க அப்படிப்பட்ட ஒரு இயக்குனருக்கு, எடுத்தது வெறும் நான்கே படத்துக்கு
“இது எங்க உலக சினிமா இல்லடா.. இது தாண்ட எங்க உணர்வான சினிமான்னு”
ஒருதலை பட்சமான தேசிய விருது குழுக்கூட அவ்வப்போது இவர் படத்துக்கு விருது வழங்க தவறுவதில்லை..(குற்ற உள்ள நெஞ்சு குறுக்குறுக்கும்ல)!
அந்த உணர்வான சினிமாவை மக்களின் மொழியில் எடுக்கும் முதன்மை கலைஞன்
தமிழ் இயக்குனர்களில் எங்க அண்ணன் பாலா தான்.
பாலாவின் படங்கள்…நடிகர்களில் சூப்பர் ஸ்டார்ருக்கு என்ன opening இருக்கோ.. அதே அளவில் இயக்குனர்களில் பாலாவின் படங்களுக்கு மட்டுமே அந்த உணர்வான opening இருக்கிறது..
அவரது அகராதியான, நக்கல் நையாண்டியான விகடன் பேட்டி..
பக்கத்தில் கடன் வாங்கியது தான்! பரவாயில்லை படியுங்கள்!
விகடன் பதிப்பகத்திற்கு..நன்றி!
(பாலா மக்களின் கலைஞன்..அவரது பேட்டிக்கெல்லாம் காப்புரிமை இருக்க முடியாது என்பதனை உணர்ந்து எங்கள் தளத்திலும் வெளியிடுகிறோம்)
அன்புடன்,
தர டிக்கெட்