ரசனைக்காரன்

July 11, 2010

Director பாலா அண்ணாச்சிக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!

Filed under: Uncategorized — rasanaikaaran @ 2:56 am

காக்கைகளும், ஓநாய்களும், ஏன்  தெருநாய்களும்

கலையை திருடிப்  பிழைக்கும் இவ்வேளையில்

நிமிராய் சமுக அவலங்களை படம் பிடித்து

இது தாண்டா தமிழ் சினிமாவின்

இன்னுமொரு பரிமாணம் என்று

ரசிகர்கள் எங்களை பெருமிதம் கொள்ள வைத்த

எம் காலத்து கலையுலக பிதாமகனுக்கு

பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!

July 10, 2010

அழகுத் திரையில் சமீபத்திய குறும்படங்கள்..

Filed under: அழகுத் திரை — rasanaikaaran @ 10:49 am

உலகமே ரசித்தது என்று சொல்லியாக வேண்டும் “காதலில் சொதப்புவது எப்படி? என்கின்ற குறும்படத்தை!
அவ்வளவு  ரசிக்கும் படியான நடிப்பு,நேர்த்தியான திரைக்கதை, இளமையான ஒளிப்பதிவு,  திறமையான இயக்கம் என்று அணைத்து துறைகளிலும் அழகாகவே உழைத்து அசத்தியிருந்தார்கள், இந்த இளம் படக்குழுவினர்! தனியார் தொலைகாட்சியில் ஏற்கனவே புகழ் பெற்று, Facebook, orkut ஆகிய சோஷியல் தளங்களில் அணைத்து தரப்பினராலும் சமீபத்தில் அரவணைக்கப்பட்ட குறும்படங்களில் இதுவும் ஒன்று. இயக்குனர் பாலாஜி, ஒளிப்பதிவாளர் அபிநந்தன், நடிகர் அதித் மற்றும் படக்குழுவினர் அனைவருமே மிகவும் பாராட்டப்பட வேண்டியவர்கள்! அனைவருக்குமே  வாழ்த்துக்கள் தலைவா!

அவர்களுடைய அடுத்த வெளியீடான.. “மிட்டாய் வீடு”

உளவியலை பிரதான பின்னணியில் கதையை பின்னுவதில் பாலாஜி கெட்டிகாரர் என்று நிருபித்திருக்கிறது
அவரது  இரண்டாவது முயற்சியும். மீண்டும் மிட்டாய் வீட்டிலும்  கொஞ்சம் உளவியல் வகுப்புகள் எடுப்பது போன்ற உணர்வுகளை  ஏற்படுத்தினாலும்  பார்பவரை ஈர்க்க எந்த விகிதத்திலும் தவறவில்லை இயக்குனர் பாலாஜி மற்றும் அவரது படக்குழுவினர்!

Create a free website or blog at WordPress.com.