இந்த படத்திற்கு விமர்சனம் ஒரு கேடா! என கண்டிப்பாக புரட்சி தலைவர் ரசிகர்களும், சோழனின் பெருமையை பறைசாற்றி வரும் தமிழர்கள் கண்டிப்பாக உரக்க சொல்வார்கள்.
ஆயிரத்தில் ஒருவன் என்கின்ற தமிழ் சினிமாவின் சாதனை பெயரை சிதைத்திருக்கிறார் செல்வராகவன்.
அந்த பெயரில் மாபெரும் சோழ வரலாற்றை அரைகுறையாக மன்னிக்கவும் கற்பனையாக ஆராய்ந்து, அதனை மிகவும் கேவலமான முறையில் நிகழ் காலத்துடன் இணைத்து adventure-fanatsy என்கின்ற பித்தத்தில், செல்வராகவன் எடுத்து இருக்கும் வாந்தி தான், தற்போது பொங்கல் திருநாள் அன்று வந்து இருக்கும் இந்த படம்.
அருமையான பார்த்திபனின் நடிப்பும், ராம்ஜியின் ஒளிப்பதிவும், கிராபிக்ஸ் செய்த எண்ணற்ற தொழிநுட்ப கலைஞர்களின் உழைப்பும் மற்றும் துணை நடிகர்களின் நடிப்பும் சரியான கதை மற்றும் திரைக்கதை நகர்வுகள் இல்லாமல் வீண்ணடிக்கப்பட்டுள்ளது.
ரீமா சென் ( சந்திரமுகி பாதிப்பு), கார்த்தி (அதே பருத்தி வீரன் சாயல்), உடை அலங்காரம் செய்த எரீமா அலி..இவர்களை பரவாவில்லை என பாராட்டலாம் மன்னிக்கவும் வாழ்த்தலாம்.
மிகவும் கேவலமானது என்றால் அது..
1.செல்வராகவனின் தைக மற்றும் ரைக்திதைக (குழம்பிய கதை மற்றும் திரைக்கதை)
2.அந்த சோழ மகாராணி, கூட்டு வல்லுறவில் கொடுமைப்படுத்தப்படும் காட்சியில் அப்படி போடு பாட்டு பின்னணியில்..சோழனையும் வரலாற்றையும் கற்பனை என்ற பெயரில் கேவலப்படுத்திய கொடுமை. இது தான் சரித்திரமும் தருத்திரியமும் இணைத்து நீங்கள் ஈன்ற கற்பனை வளமையோ? செல்வரகாவா?
3.பின்னணி இசையில் இசையை கொலை செய்திருக்கின்ற ஜீவி பிரகாஷின் பின்னணி இசை தான் . அந்த கால தமிழிசையை பற்றி ஆராய்ந்து இசையமைத்துள்ளதாக பேட்டிகளில் வாய்க்கூசாமல் பொய் சொல்லி இருக்கின்றார் என இப்போது வெட்ட வெளிச்சமாக உணர்த்துகிறது அவரது அனுபவமற்ற இசை.
தற்போதைய தமிழ் சினிமாவில் செல்வராகவன் ஸ்டைல் என்று சொல்லக்கூடிய கிளு கிளுப்புகளும், விடலை வசனங்களும், ஆங்காங்கே தூவியும், இரைத்தும் இளைஞர்களின் கவனத்தை ஈர்க்கக்கூடிய இயக்குனர் என்ற தற்பெருமை இந்த படத்திலும் பேசித்திரியலாம் செல்வராகவன். இந்த முறை கூடுதலாக S.A.சந்திரசேகரே வெட்கி தலைகுனிய வைக்கும் கூட்டு பாலியல் வல்லுறவு வேறு.
பாவம் தலைவிதியுடன் ரவீந்திரன்..
தலைவலியுடன்..தரடிக்கெட்
Selva va nambi first show padathuku ponan, first half paravala… aana second half utkara mudiyala…. ivaru aarachi pana naamathan kidachoma…
Comment by Suresh — January 14, 2010 @ 1:43 pm |
Athuthan first laye ithu anaithum karpaninu solli selvaragaven podurarula
Comment by Jaiganesh — January 14, 2010 @ 3:51 pm |
வணக்கம் ஜெய் கணேஷ், கற்பனைன்னு சொல்லி படம் ஆரம்பிச்சிட்டு கலைஞர் பத்தி படம் எடுக்க சொல்லுங்க..தி.மு.ககாரங்க சும்மா விடுவாங்களா? மதுரைன்னு ஒரு ஊர்ல ரிலீஸ் பண்ணுங்களேன் பார்ப்போம்!அதே மாதிரி தான், உண்மையா தஞ்சாவூர் மண்ணுல பிறந்த எவனும் கற்பனையா கூட நினைக்க மாட்டாங்க..சோழ வரலாறுங்க!..தமிழனோட மான மரியாதைங்க அது! வந்தேறிங்க வேண்ணா ஏத்துக்கலாம்..நான் தஞ்சாவூர்க்காரன். படத்தை வன்மையா கண்டிக்கிறோம்!
Comment by rasanaikaaran — July 11, 2010 @ 4:00 am |
i agree with you..
but one if this story is taken by a hollywood director, you will for sure( i guess )say it was a good effort..i accept the fact that it would have been better if directed by a hollywood director…but though
we should learn to appretiate the bold move of selvaraghavan….
Comment by raju — June 22, 2010 @ 10:36 am |
இந்த பழைய்ய பல்லவியை எத்தனை நாள் பாடிக்கிடே இருப்பீங்க. என்னங்க நாமும் அதே 3D Max, Maya software-களை தான் பயன்படுத்துறோம் அமெரிக்கர்களும் அதே தான் பயன்படுத்துறாங்க. எதற்கெடுத்தாலும் தமிழன் தான் முன்னோடின்னு வாய்கிழிய பேசுறாங்க..ஏன் அத செயல காட்ட வேண்டிய தானே. அப்ப ஹாலிவுட் படங்களுக்கு இணையான்னு சொல்லி, பாவம் திறமையாய் உழைக்கிற அவங்களை ஏன் கேவலபடுத்தணும்!
தமிழன் என்றுமே வல்லமை படைத்தவன் தான்..அது எந்த தமிழனுக்கும் சந்தேகம் வராது..என் தமிழனின் அனைத்து முயற்சியிலும், வளர்ச்சியிலும் எங்களது அன்பும் ஆதரவும் என்றுமே உண்டு..அதே போன்று தவறுகளையும் சுட்டிக்காட்டும் உரிமையும்(காசு கொடுத்து படம் பார்த்தவர்கள்) எங்களுக்கு உண்டு!
இது தான் Bold Move? உதாரணம் காட்ட முடியும்.. ஆனால் அந்த தமிழ் மலையாள திரைக்கவியங்களை இந்த குப்பையுடன் ஒப்பிட்டு கேவலப்படுத்த மனமில்லை!
Comment by rasanaikaaran — July 11, 2010 @ 4:23 am |