
இந்த படத்திற்கு விமர்சனம் ஒரு கேடா! என கண்டிப்பாக புரட்சி தலைவர் ரசிகர்களும், சோழனின் பெருமையை பறைசாற்றி வரும் தமிழர்கள் கண்டிப்பாக உரக்க சொல்வார்கள்.
ஆயிரத்தில் ஒருவன் என்கின்ற தமிழ் சினிமாவின் சாதனை பெயரை சிதைத்திருக்கிறார் செல்வராகவன்.
அந்த பெயரில் மாபெரும் சோழ வரலாற்றை அரைகுறையாக மன்னிக்கவும் கற்பனையாக ஆராய்ந்து, அதனை மிகவும் கேவலமான முறையில் நிகழ் காலத்துடன் இணைத்து adventure-fanatsy என்கின்ற பித்தத்தில், செல்வராகவன் எடுத்து இருக்கும் வாந்தி தான், தற்போது பொங்கல் திருநாள் அன்று வந்து இருக்கும் இந்த படம்.
அருமையான பார்த்திபனின் நடிப்பும், ராம்ஜியின் ஒளிப்பதிவும், கிராபிக்ஸ் செய்த எண்ணற்ற தொழிநுட்ப கலைஞர்களின் உழைப்பும் மற்றும் துணை நடிகர்களின் நடிப்பும் சரியான கதை மற்றும் திரைக்கதை நகர்வுகள் இல்லாமல் வீண்ணடிக்கப்பட்டுள்ளது.
ரீமா சென் ( சந்திரமுகி பாதிப்பு), கார்த்தி (அதே பருத்தி வீரன் சாயல்), உடை அலங்காரம் செய்த எரீமா அலி..இவர்களை பரவாவில்லை என பாராட்டலாம் மன்னிக்கவும் வாழ்த்தலாம்.
மிகவும் கேவலமானது என்றால் அது..
1.செல்வராகவனின் தைக மற்றும் ரைக்திதைக (குழம்பிய கதை மற்றும் திரைக்கதை)
2.அந்த சோழ மகாராணி, கூட்டு வல்லுறவில் கொடுமைப்படுத்தப்படும் காட்சியில் அப்படி போடு பாட்டு பின்னணியில்..சோழனையும் வரலாற்றையும் கற்பனை என்ற பெயரில் கேவலப்படுத்திய கொடுமை. இது தான் சரித்திரமும் தருத்திரியமும் இணைத்து நீங்கள் ஈன்ற கற்பனை வளமையோ? செல்வரகாவா?
3.பின்னணி இசையில் இசையை கொலை செய்திருக்கின்ற ஜீவி பிரகாஷின் பின்னணி இசை தான் . அந்த கால தமிழிசையை பற்றி ஆராய்ந்து இசையமைத்துள்ளதாக பேட்டிகளில் வாய்க்கூசாமல் பொய் சொல்லி இருக்கின்றார் என இப்போது வெட்ட வெளிச்சமாக உணர்த்துகிறது அவரது அனுபவமற்ற இசை.
தற்போதைய தமிழ் சினிமாவில் செல்வராகவன் ஸ்டைல் என்று சொல்லக்கூடிய கிளு கிளுப்புகளும், விடலை வசனங்களும், ஆங்காங்கே தூவியும், இரைத்தும் இளைஞர்களின் கவனத்தை ஈர்க்கக்கூடிய இயக்குனர் என்ற தற்பெருமை இந்த படத்திலும் பேசித்திரியலாம் செல்வராகவன். இந்த முறை கூடுதலாக S.A.சந்திரசேகரே வெட்கி தலைகுனிய வைக்கும் கூட்டு பாலியல் வல்லுறவு வேறு.
பாவம் தலைவிதியுடன் ரவீந்திரன்..
தலைவலியுடன்..தரடிக்கெட்