ரசனைக்காரன்

February 11, 2009

நான் கடவுள்…ஒரு திறனாய்வு அலசல்

Filed under: சினிமா — rasanaikaaran @ 11:57 am
Tags:

vmain-copy

நான் கடவுள்…?

அது இல்லை.. இது இல்லை..
அதனால்.. இதனால் படம் சரியில்லை..
மூன்று வருடம் உழைத்தற்காக வேண்டுமானால்..
அகோரமாக காட்டியதற்காக வேண்டுமானால்..
விளும்பு நிலை மனிதர்களை நடிக்க வைத்தற்கு வேண்டுமானால்..

பாலாவையும், அவரின் நான் கடவுளையும் பாராட்டலாம்!
என்று பல blogகளில் விமர்சனங்களாக எழுதப் பட்டு இருந்தது..

அவை அவரவரின் விமர்சனப் பார்வை..

நாங்கள் நான் கடவுளைப் பற்றி பொதுவான விமர்சனமாக எழுதாமல்…

அவற்றை வேறு விதமாக அணுகியுள்ளோம்.. அதில் சிலர் எழுதிய பொதுக் கருத்தையும், பலரின் உடன்படாதக் கருத்துகளையும் ஒரு சேர இணைத்து, ஒர் திறனாய்வு அலசலாக நான் கடவுள் திரைப்படத்தினை பற்றி தமிழகத்தின் மூத்த நாடகக் கலைஞர், விமர்சகர், தமிழ்ப் பல்கலைகழகத்தின் நாடகத் துறைப் பேராசிரியர் மு. ராமசாமி, அவர்களிடத்தில் அலசியிருக்கிறோம்..

இது ஒரு ஆடியோ உரையாடல்.. அய்யா அவர்களிடம் கேட்கப்பட்ட கேள்விகள்… கீழே..

அலசல் 1..

1. நான் கடவுள் பற்றி?

2.விளிம்பு நிலை மனிதர்களை மட்டுமே பாலாவின் அனைத்துப் படங்களும் பேசுவதாகப் பார்வையாளர்கள் கருதுகிறார்கள்?

3.தமிழ் சினிமாவின் சாம்பிரதாயக் கோட்பாடுகளான ஹீரோ ஹீரோயின் கதாபாத்திரங்களை முன்னிறுத்திக் கதை சொல்லாமல்.. எதிர்மறை வாழ்வியலைக் காட்சியாக்குவது தான் பாலாவின் விருப்பமா?

அலசல் 2..

4.பாலாவின் முந்தையப் படங்கள் போல் இல்லாமல் கதாநாயகனுடைய (ஆர்யாவின்) கதாபாத்திரம் வலிமை இல்லாமல் குறைந்த ஆளுமைக்கு உட்பட்டு.. மொத்தக் கதையின் முடிவிற்கு எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாமல் போகிறதாகப் பார்வையாளர்கள் உணர்கிறார்கள்…

5.படத்தின் பிற்பகுதியில் பல காட்சிகளில் தொடர்பு இல்லாமல் இருப்பதாக ஓர் உணர்வு ஏற்படுகிறது..குறிப்பாக அம்சவல்லி மாதாகோயில் காட்சியும் அதற்கு அடுத்த காட்சியிலே அவர் அகப்பட்டுக்கொள்வதாக அமைத்துள்ள காட்சியும் முற்றிலும் தொடர்பு இல்லாதவாறு தோன்றுகிறதே?

6.ஜெயமோகனின் ஏழாவது உலகத்தின் சில உணர்வுகளை எடுத்து கொண்ட பாலாவின் இந்தப் படம் பெரிதாக எதையோ இழந்து இருப்பதாகவும்… அதற்கு ஏழாவது உலகத்தையே எடுத்திருக்கலாமே என்றும் சிலர் கருதுகிறார்கள்…

அலசல் 3..

7.புதியப் பாடல்களைப் பயன்படுத்தாமல் பாலா அதிகமாகப் பழையப் பாடல்களை பயன்படுத்துவதைக் குறித்து?

8.இளையராஜா….தொழில் நுட்பக் கலைஞர்கள் பற்றி?

அலசல் 4..

9.வசனம்… ஜெயமோகன்?

10. படத்தைப் பற்றிய உங்கள் கருத்தினைப்  பாலாவிடம் கூறுனீ ர்களா?


இது நாள் வரையுமான திரைப்படம் சார்ந்த அனுபவங்களும், வாழ்வியல் அனுபவங்களும் எங்களுக்குள் உருவாக்கியிருகிற பார்வையின் வெளிப்பாடே இத்திறனாய்வு அலசல்.

….ரசனைக்காரன்


3 Comments »

 1. அருமையான அலசல் , உண்மையிலேயே மசாலா தனமான படங்களுக்கு செருப்படியாக இருந்தது , ஆனால் என்ன காட்சிகளை விவரிக்கும் போது கிட்டதட்ட முக்கால்வாசி கதையை சொல்லிவிட்டார் ..நல்ல பதிவு வாழ்த்துக்கள்

  Comment by -observer — February 12, 2009 @ 3:31 am | Reply

 2. நானும் நான் கடவுள் பத்தி நிறைய வலைபூக்களில் எழுதியிருந்த அறிவு ஜீவிகளின் விமர்சனகளை படித்தேன். ஸ்லம்டாக் மில்லியினரோடு ஒப்பீடு பண்றாங்க..பருப்பு மாதிரி. ஸ்லம்டாக் என்னை பொறுத்தவரை ஒரு மசாலா வகை தான்.. நான் கடவுள் தான் உலக சினிமா படம். அறிவு ஜீவி பருப்புகள் கொஞ்சம் இங்கே வந்து இவர் சொல்லுவதை கேட்கவும்.. ஸ்லம்டாக்கு ஆஸ்கார்ன்ன, தயவு செய்து அந்த ஆஸ்காரை நான் கடவுளுக்கு கொடுத்து கேவலப்படுத்தி விட வேண்டாம்! உண்மையாக பாலா மாற்ற இந்தியா கலை (கொலை) சினிமா ஜீவிளுக்கு கொடுத்த செருப்படி தான்.. நான் கடவுள்!அருமையான விளக்கம். வாழ்த்துக்கள்!

  Comment by பாவனி — February 12, 2009 @ 7:08 am | Reply

 3. நீங்கள் கூறிய கருத்து மிக சிறப்பாக இருந்தது.

  அதாவது படைப்பாளி என்பவன் அனைவரையும் திருப்தி படுத்தும் படி படம் எடுப்பானால் அவனால் தனக்கு பிடித்த விஷயத்தை சொல்ல முடியாது என்பது மிகவும் உண்மை.

  அவ்வாறு அனைவரையும் திருப்தி படுத்தும் படி எடுக்கவேண்டும் என்றால் அது சாதாரண படமாக தான் கருத்தப்படும்.

  Comment by கிரி — February 12, 2009 @ 8:49 am | Reply


RSS feed for comments on this post. TrackBack URI

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Create a free website or blog at WordPress.com.

%d bloggers like this: