ரசனைக்காரன்

February 11, 2009

நான் கடவுள்…ஒரு திறனாய்வு அலசல்

Filed under: சினிமா — rasanaikaaran @ 11:57 am
Tags:

vmain-copy

நான் கடவுள்…?

அது இல்லை.. இது இல்லை..
அதனால்.. இதனால் படம் சரியில்லை..
மூன்று வருடம் உழைத்தற்காக வேண்டுமானால்..
அகோரமாக காட்டியதற்காக வேண்டுமானால்..
விளும்பு நிலை மனிதர்களை நடிக்க வைத்தற்கு வேண்டுமானால்..

பாலாவையும், அவரின் நான் கடவுளையும் பாராட்டலாம்!
என்று பல blogகளில் விமர்சனங்களாக எழுதப் பட்டு இருந்தது..

அவை அவரவரின் விமர்சனப் பார்வை..

நாங்கள் நான் கடவுளைப் பற்றி பொதுவான விமர்சனமாக எழுதாமல்…

அவற்றை வேறு விதமாக அணுகியுள்ளோம்.. அதில் சிலர் எழுதிய பொதுக் கருத்தையும், பலரின் உடன்படாதக் கருத்துகளையும் ஒரு சேர இணைத்து, ஒர் திறனாய்வு அலசலாக நான் கடவுள் திரைப்படத்தினை பற்றி தமிழகத்தின் மூத்த நாடகக் கலைஞர், விமர்சகர், தமிழ்ப் பல்கலைகழகத்தின் நாடகத் துறைப் பேராசிரியர் மு. ராமசாமி, அவர்களிடத்தில் அலசியிருக்கிறோம்..

இது ஒரு ஆடியோ உரையாடல்.. அய்யா அவர்களிடம் கேட்கப்பட்ட கேள்விகள்… கீழே..

அலசல் 1..

1. நான் கடவுள் பற்றி?

2.விளிம்பு நிலை மனிதர்களை மட்டுமே பாலாவின் அனைத்துப் படங்களும் பேசுவதாகப் பார்வையாளர்கள் கருதுகிறார்கள்?

3.தமிழ் சினிமாவின் சாம்பிரதாயக் கோட்பாடுகளான ஹீரோ ஹீரோயின் கதாபாத்திரங்களை முன்னிறுத்திக் கதை சொல்லாமல்.. எதிர்மறை வாழ்வியலைக் காட்சியாக்குவது தான் பாலாவின் விருப்பமா?

அலசல் 2..

4.பாலாவின் முந்தையப் படங்கள் போல் இல்லாமல் கதாநாயகனுடைய (ஆர்யாவின்) கதாபாத்திரம் வலிமை இல்லாமல் குறைந்த ஆளுமைக்கு உட்பட்டு.. மொத்தக் கதையின் முடிவிற்கு எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாமல் போகிறதாகப் பார்வையாளர்கள் உணர்கிறார்கள்…

5.படத்தின் பிற்பகுதியில் பல காட்சிகளில் தொடர்பு இல்லாமல் இருப்பதாக ஓர் உணர்வு ஏற்படுகிறது..குறிப்பாக அம்சவல்லி மாதாகோயில் காட்சியும் அதற்கு அடுத்த காட்சியிலே அவர் அகப்பட்டுக்கொள்வதாக அமைத்துள்ள காட்சியும் முற்றிலும் தொடர்பு இல்லாதவாறு தோன்றுகிறதே?

6.ஜெயமோகனின் ஏழாவது உலகத்தின் சில உணர்வுகளை எடுத்து கொண்ட பாலாவின் இந்தப் படம் பெரிதாக எதையோ இழந்து இருப்பதாகவும்… அதற்கு ஏழாவது உலகத்தையே எடுத்திருக்கலாமே என்றும் சிலர் கருதுகிறார்கள்…

அலசல் 3..

7.புதியப் பாடல்களைப் பயன்படுத்தாமல் பாலா அதிகமாகப் பழையப் பாடல்களை பயன்படுத்துவதைக் குறித்து?

8.இளையராஜா….தொழில் நுட்பக் கலைஞர்கள் பற்றி?

அலசல் 4..

9.வசனம்… ஜெயமோகன்?

10. படத்தைப் பற்றிய உங்கள் கருத்தினைப்  பாலாவிடம் கூறுனீ ர்களா?


இது நாள் வரையுமான திரைப்படம் சார்ந்த அனுபவங்களும், வாழ்வியல் அனுபவங்களும் எங்களுக்குள் உருவாக்கியிருகிற பார்வையின் வெளிப்பாடே இத்திறனாய்வு அலசல்.

….ரசனைக்காரன்


February 8, 2009

நான் கடவுள் திரை பாடல்கள்

Filed under: வீடியோ — rasanaikaaran @ 7:29 am
Tags: , ,

பிட்சை பாத்திரம்

ஓம் சிவ ஓம்

February 6, 2009

பாலாவின் நான் கடவுள் படத்தின் நேரடி தியேட்டர் ரிப்போர்ட்…

Filed under: சினிமா — rasanaikaaran @ 8:35 am

nkimages

ஒரு படம் எடுத்து மக்கள் மனதில் இடம் பிடிப்பது  என்பது சமீபத்தில் பெரிய விஷயம்..

கோடீஸ்வரன் முதல் தெருகோடியில் வாழ்பவனையும் ஒரே உணர்வில் இணைத்து விடும் வல்லமை சினிமாவுக்கு மட்டுமே உண்டு. அவ்வாறான சினிமாவை எடுக்கக்கூடிய வித்தை தெரிந்த இயக்குனர் பாலாவின் நான் கடவுள் படத்தின் நேரடி தியேட்டர் ரிப்போர்ட்…

முடிஞ்சா இது மாதிரி படம் எடுங்க… இல்லேன்னா கோயில் வாசல்ல போய் பிச்சை எடுக்க சொல்லுங்க அந்த so called popular tamil directors -ச!
…கல்லூரி மாணவன்.

ஜீரணிக்க முடியலைங்க.. படம் மிரட்டியிருக்காரு பாலா..
…ஆட்டோ ஓட்டுனர்.

Its completely a cult movie of recent times(even in recent decades of indian cinema)..
…திரைமொழி படிக்கும் மாணவன்.

மனநலம் குன்றியவர்களை படத்தில் உன்னத கலைஞர்களாக வாழவைத்திருகிறார் பாலா!
…நாடக நடிகர்.

இந்த ஆளால மட்டும் தான் இப்படி படம் எடுக்க முடியும்.. போட்ட லீவ்வுக்கும் கொடுத்த காசுக்கும் அர்த்தம் தரக்கூடிய படம்.. அவ்ளோ தான் சொல்ல முடியும் இப்போ.. மனச கசக்கிட்டாங்க பாலா..
…சாப்ட்வேர் எஞ்சினியர்.

இந்த படம் ஓடலைன்னா இனிமே தமிழ் சினிமாவுல படம் எடுக்கிறதே வேஸ்ட்!
…சென்சார் போர்டு அதிகாரி பாபு ராமசுவாமி ( இந்த தகவல் மட்டும் ஏற்கனவே படத்தின் ஒலிநாடா வெளியீட்டு விழாவில் பாபு ராமசுவாமி சொன்ன செய்தியை யூகி சேது பகிர்ந்து கொண்டது..)

தற்போதைக்கு இத்துடன் முடித்து கொள்கிறோம்..
விரைவில் விமர்சனத்துடன்..

February 3, 2009

பீதோவன் of ஆசியாவின் இத்தாலி இசைப்பயணத்தில்

Filed under: இசை — rasanaikaaran @ 1:30 am
Tags: , ,

(இளையராஜா ) பீதோவன் of ஆசியாவின்
இத்தாலி இசைப்பயணத்தில்
இசைஞானி இசைத்தது..
ரசனைக்காரன் ரசித்தது..

February 2, 2009

எம் ஈழத்து இசை தமிழச்சி ‘மாயா’ மாதங்கி அருள்பிரகாசம்

Filed under: இசை — rasanaikaaran @ 9:30 am
Tags: , ,

123632__mia_lஸ்லம்டாக் மில்லியினர் படத்திற்காக எ.ஆர்.ரஹ்மானின் ஜெய் ஹோ பாடலையும், மற்றும் அவரது பின்னணி இசை சேர்ப்பை காட்டிலும் மேற்கத்தியவர்களால் அதிகமாக பாராட்டைப்பெற்றது  M.I.A என்கின்ற ‘மாயா’ மாதங்கி அருள்பிரகாசம் பாடி இசையமைத்த பேப்பர் பிலேன்ஸ் மற்றும் ஒ சாயா என்னும் பாடல்கள் தான். இவற்றில் மாயாவின் படைப்புகளான பேப்பர் பிலேன்ஸ் கிராம்மி விருதுக்கும், ஒ சாயா ஆஸ்காருக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஸ்லம்டாக் மில்லியினர் இசையமைப்பில் தன்னுடன் பணியாற்றியதற்காக ரஹ்மான் கோல்டன் குளோப் விருது வாங்கும் மேடையில் மறவாமல் மாயாவுக்கு நன்றி தெரிவித்ததை நினைவில் கொள்ளலாம்.

‘மாயா’ மாதங்கி அருள்பிரகாசம்,இவர் இங்கிலாந்தில் புகழ் பெற்ற பாடல் ஆசிரியர், ராப் இசை பாடகர். அரசியலையும், உலக வாழ்வியலையும் இவரது ராப் இசை படைப்புகளில் பிரதானமாக பிரதிபலித்து  ரசிக்கும்படி வழங்குவது   இவரது பெரிய வெற்றி என்கிறது ராப் இசை உலகம். ஈழத்தில் 17 ஜுலை 1977-ல் கலா மற்றும் அருட்பிரகாசம் தம்பதியினருக்கு பிறந்தவர். இவரது தந்தை அருட்பிரகாசம் தீவிர ஈழ ஆதரவாளர் மற்றும் அப்போதையை தமிழ் ஈழ மீட்பு போர்ப்படை (EROS) பணியாற்றியவர். முதலாம் உள்நாட்டு போரில் இலங்கை அரசு பூர்வக்குடி தமிழர்களையும், அவர்களது குடும்பங்களையும் கொலை செய்ய தொடங்கிய போது தனது தாயுடன உயிர் பிழைத்து சென்னைக்கு வந்தார். மீண்டும் தனது தந்தையை தேடி தாயுடன் ஈழம் சென்ற போது, இலங்கை அரசின் எதிரியாக கருதப்பட்ட இவர் தந்தையுடன் சேர்த்து, இவர்களையும் தேடியது இலங்கை அரசு. பிறகு மீண்டும் சென்னை வந்து, உறவினர்கள் உதவியால் 1988 -ல் தனது தாய், அக்காள் மற்றும் தம்பியுடன் லண்டனுக்கு அகதியாக  சென்று அடைக்கலம் புகுந்தார் மாயா.

mia_wm01லண்டன் வாழ்வியலையும், ஈழ அரசியலையும் சித்தரித்த மாயாவின் graffiti ஓவியங்கள் 2001 -ல் Alternative Turner விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது. அதன் மூலம் Elastica குழுவை சேர்ந்த ஜஸ்டின் ஃபிரிச்மேனின் தங்களது இரண்டாவது ஆல்பமான The Menance -ன் அட்டைப்படதுக்கு மாயவை நாடினார்.. அடுத்து அந்த குழுவின் அமெரிக்கா இசைப்பயணத்தையும், அவர்களது Elastica-வின் “Mad Dog God Dam” இசை வீடியோ பதிவையும் செய்யும் வாய்ப்பும் மாயாவுக்கு..அந்த பயணத்தில் தான் மாயாவுக்கு இசையின் மீது நம்பிக்கை பிறந்தது.. மேலும் லண்டனில் உள்ள சென்ட்ரல் செயிண்ட் மார்டின்ஸ் ஆர்ட் அகேடமியில் தனது கலைப் பட்டப்படிப்பை முடித்தார். பட்டப்படிப்பு முடிந்ததும் இவர் தனி இசைப்பாடல்கள் இயற்றுவதும் தானாகவே ஆல்பங்கள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டார். கல்லூரியில் படித்துக்கொண்டு இருக்கும் போதே மாயாவின் முதல் இசை ஆல்பமான அருளரில், கிலாங் (Galang) மற்றும் சன் பிளவர் (Sunflower) எனும் பாடல்கள் கல்லூரியின் வானொலியிலும், ஃபையில் ஷரிங்கிலும் அதிகமாக பிரபலமானது மட்டுமல்லாமல் ஷோ பிஸ் ரெகார்ட்சில்லும் அதிகமான பதிவை ஏற்படுத்தியது… அடுத்து வந்த மாயாவின் கலா (2005), இசை ஆல்பம் சென்சார்களில் சிக்கினாலும் பில் போர்டின் டாப் 200 பாடல்களில் 18 வது இடத்தை பெற்றது.

“கலா” இசை ஆல்பத்திலிருந்து வந்த பேப்பர் பிளேன்ஸ் பாடல், தற்போது இசை உலகின் பெரிய விருதான கிராம்மி விருதின் பக்கத்தில் நிற்கிறது . மேலும் இந்த பாடல் ஸ்லம்டாக் மில்லியினரில் பயன்படுத்தப்பட்டு உலக அளவில் அதிக பாராட்டுகளை வாங்கியிருக்கிறது. ஆனால் ஆஸ்கார் விருதுக்கு, படத்தின் ஒ சாயா பாடலுக்கு தான் மாயா பரிந்துரைக்கபட்டுள்ளார். மாயவை பாலிவுட்டுக்கு அறிமுகம் செய்த பெருமை ரஹ்மானை சேரும். இந்த படத்திற்கு முன் ரஹ்மானுடன் பணியாற்ற வில்லை என்றாலும், மாயாவின் பாடல்கள் பல ரஹ்மானின் ரெகார்டிங் ஸ்டுடயோவில் தான் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஸ்லம்டாக் மில்லியினர் மூலம் இந்திய தமிழனும், ஈழத்து தமிழச்சியும் ஆஸ்காரின் விருதுப்பட்டியலில் நுழைந்து விட்டனர் என்பது உலக தமிழர்களின் அளவிட முடியாத பெருமையே!

தற்பொழுது கற்பமாக உள்ளதால் தன்னால் இரு விருது வழங்கும் விழாகளுக்கு செல்ல முடியாத சின்ன வருத்தமிருந்தாலும், தாய்மையின் உன்னத உணர்வுகளை அனுபவித்து, தன் குழந்தையின் வரவை நோக்கி சந்தோசமாகவே காத்திருப்பதாக சொல்கிறார் மாயா.

மாயாவின் இசை வீடியோகள்

பேப்பர் பிளேன்ஸ்(Paper Planes)..

கிலாங் (Galang)


சன் பிளவர் (Sunflower)

பாம்பூ பங்கா (Bamboo Banga)

(மாயாவின் பெரும்பாலான பாடல்களில் இந்திய திரை இசையின் தாக்கம் அதிகமாக இருக்கவே செய்கிறது. அதில் குறிப்பிட தக்கவைகள்.. பாம்பூ பங்கா (bamboo banga) பாடலில், நமது தளபதி படத்தின் காட்டுகுயிலு மனசுக்குள்ள முகப்பு இசையில் தொடங்கி… நடு நடுவே கோரஸ் பஜனைகள் சேர்ந்து கொள்கிறது. அதே போன்று hussel-லில் கேப்டன் பிரபாகரனின் ஆட்டமா தேரோட்டமாவின் முகப்பு இசை. இப்படி ஆங்காங்கே கொஞ்சம் ஒட்டுகள் இருக்கதான் செய்கிறது.. அதானே ராப்!)

..ரசனைக்காரன்


Blog at WordPress.com.