ரசனைக்காரன்

January 28, 2009

வால்ஸ் வித் பஷிர்..திரை விமர்சனம்

Filed under: சினிமா — rasanaikaaran @ 8:58 am

waltz_with_bashir111

கோல்டன் குலோப்பின் அயல் சினிமாவின் விருதையும்  பெற்று ஆஸ்காரின் வாசலில் நின்று  உலகின் கவனத்தை ஈர்த்துக் கொண்டுயிருக்கும்  இன்னொரு படம் “வால்ஸ் வித் பஷிர் (waltz with bashir)” எனும் இஸ்ரேலிய மொழி திரைப்படம்.இதன் சிறப்பு உலகிலேயே முதல் முறையாக வந்து இருக்கும் அனிமேஷன் ஆவணப் படம் என்பது.

இஸ்ரேலிய போர் வீரரான அரி போல்மேன் இயக்கியிருக்கும் வால்ஸ் வித் பஷிரில்,  இஸ்ரேலின் ஆதரவுடன், மேற்கு லெபனோனில் 1980 களில் நடந்தேறிய சப்ரா சாட்திலா  கொலைவெறி  தாக்குதலுக்கும் தனக்கும் என்ன சம்பந்தம் என்று தனது  மறந்து போன அந்த கொடூர அனுபவத்தை நினைவு கொள்ள, போரில் தன்னுடன் பணியாற்றிய நண்பர்களை தேடி செல்கிறார் அரி போல்மேன்..என ஆரம்பிக்கிறது இந்த திரைப்படம்.

BBCயின் தகவலின் படி செப்டம்பர் 16முதல்18, 1982 வரை மேற்கு லெபனோனில் இஸ்ரேலிய படையின் கண்காணிப்பில் அடைக்கலம் கொடுக்கப்பட்ட பாலஸ்தீனர்கள்  சுமார் 800 பேர்கள் சப்ரா மற்றும்  சாட்திலா இடங்களில் கிறிஸ்துவ பாலங்கிஸ்ட் குழுவால் கொடூரமாக கொல்ல ப்பட்டனர்.

சம்பவம் நடந்த இரு நாட்களுக்கு முன் லெபனோன் நாட்டு தேர்தலில் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்த  இஸ்ரேலிய ஆதரவு கிறிஸ்துவ பாலங்கிஸ்டின் தலைவர் பஷிர் ஜெம்மையில் பாலஸ்தீனர்களால்  கொள்ளப்பட்டார். அதற்கு பழிவாங்கவே  இந்த கொலைவெறி  தாக்குதலுக்கு இஸ்ரேல் முழுமையாக ஆதரவு அளித்து என்றும் தெரிவிக்கிறது.

மறந்து போன இந்த சம்பவம் தன் கனவில் வந்து போவதை உணர்ந்த அரி போல்மேன், அதனின் உண்மையை அறிய லெபனோனின்  மேற்கு மீரூட்டுக்கு செல்கிறார். அங்கு போரில் தன்னுடன் பணியாற்றிய நண்பர்களையும், மனதத்துவ நிபுணர் ஒருவரையும் மேலும் ரான் பென் யிஸ்காய்  எனும் பத்திரிகையாளர் ஒருவரையும் சந்தித்து உரையாடி உண்மையை கண்டறிவது தான்   மீதி கதை.

கலை இயக்குனர் டேவிட் போலன்ஸ்கீ, அனிமேஷன் இயக்குனர் யோனி குட்மேன் மற்றும் இசையமைத்த மாக்ஸ் ரிசெர் ஆகிய மூவரும்   அரி போல்மேனுடன் இத்திரைபடத்திற்காக நான்கு வருடம் உழைதிருக்கின்றனர்.  முதலில் 90 நிமிடத்திற்கான படத்தை எடுத்துக்கொண்டு, பிறகு ரோடோஸ்கோபி முறையில் திரைக்கதைக்கேற்ப  அதனை 2300 வரைபடங்களாக பிரித்து காமிக் கதபாத்திரங்களுக்கான நகர்வை Flash, 3D போன்ற தொழில்நுட்பங்களின் துணையுடன் திரை சுருளிலேயே  வரைந்துள்ளனர்.

அனிமேஷன் படம் தானே என்று பார்வையாளர்களும் அலட்சியமாக கருதாமல் காட்சிகளில் ஒன்றி வரலாற்றின் உண்மைகளுடன் ஆராய தூண்டுவது  படத்தின் பெரிய வெற்றி. மேலும்  உண்மை சூழலில் காமிக்ஸ் கதாபாத்திரங்கள் கதைகேற்ப உணர்வுகளை வெளிப்படுத்துவது, வந்த ஏனைய  காமிக்ஸ் திரைப்படங்களை காட்டிலும்  புதுமையாகவும் உணர்வுபூர்வமாகவும்  உள்ளதை உணர முடிகிறது என தர டிக்கெட் தெரிவிக்கிறார்.

2 Comments »

 1. உங்க விமர்சனத்தை படிச்சப்ப “அடடா.. இது மாதிரி என்னோட விமர்சனம்” இல்லாம போய்டுச்சேன்னு இருந்தது.

  கலக்கலா எழுதி இருக்கீங்க.

  படுகொலை செய்யப்பட்ட எண்ணிக்கை மட்டும் 358-ல் இருந்து 3,500 வரை வேறுபடுகிறது. நிறய சுட்டிகள் 3000-ன்னு சொல்லுறாங்க.

  அப்புறம் பஷீரை கொன்னது யாருன்னு.. இதுவரை தெரியாது. பாலஸ்தீனியர்கள்னு இஸ்ரேலும், இஸ்ரேல்தான்னு மற்றவர்களும் சொல்லிட்டு இருக்காங்க.

  அந்த படுகொலைக்கு தலைமை தாங்கிய ஹோபிகா, ஏரியல் ஷரோனுக்கு எதிரா வாக்குமூலம் கொடுக்கப்போறதா சொன்னவுடனே.. ஒரு கார் பாம்-ல மண்டைய போட்டுட்டார்.

  Comment by Bala — January 29, 2009 @ 11:29 am | Reply

 2. செஞ்சுலுவை சங்கம் குத்துமதிப்பாக 1000-1500 வரை என்று சொல்லி இருந்தாலும், நீங்கள் சொல்வது போல 3500 பாலஸ்தீனர்கள் கொலை செய்யப்பட்டது தான் உண்மையென பல வரலாற்று செய்திகள் கூறுகிறது.. தங்கள் கருத்துக்கு நன்றி தலைவா!

  Comment by rasanaikaaran — January 29, 2009 @ 7:14 pm | Reply


RSS feed for comments on this post. TrackBack URI

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Create a free website or blog at WordPress.com.

%d bloggers like this: