ரசனைக்காரன்

December 31, 2009

சித்திரவதைகள் of தமிழ் சினிமா

Filed under: சினிமா — rasanaikaaran @ 11:49 pm

சித்திரவதைகள் of  தமிழ் சினிமா

1. *ரீமிக்ஸ் படுகொலை : சிலம்பாட்டம் படத்தில் “வச்சுகவா” பாடலை ரீமிக்ஸ் என்ற பெயரில் படுகொலை செய்த யுவன் ஷங்கர் ராஜா.

2.*Dance படுகொலை : ஜிம்நாச்டிக்ஸ் பயிற்சியில் சிரமப்பட்டு சிம்பு ஆடுவது போல சிலம்பாட்டம் படத்தில் dance ஆடி சித்திரவதை செய்தது.

3.Over Acting Torture: சூர்யா மற்றும் சேரன். சேரன் மன்னிக்கவும் உண்மையைத்தான் சொல்லுகிறேன்

4.Herosim Torture: *சிம்பு( சிலம்பாட்டம் ) அமீர்( யோகி) மற்றும் விஷால்( சத்யம் , தோரணை)

5. Marketing Torture: மாசிலாமணி போன்ற கொத்துப்படங்களுக்கு Marketing செய்த சன் பிக்சர்ஸ்.

ஆறுதல் of  தமிழ் சினிமா

மிகப்பெரிய ஆறுதல்: விஜய்யின் வேட்டைக்காரன் படத்திலிருந்து  நிறைய பஞ்சர் dialogues-களை  நீக்கி மக்களை முடிந்தவரை காப்பாற்றியது நன்றி சன் பிக்சர்ஸ்

குறிப்பு:
* : சிம்புவின் சிலம்பாட்டம் 2008 ஆம் ஆண்டு டிசம்பரில்  வெளியாகிவிட்டதால் 2009 ஆம் ஆண்டுக்கு  சேர்த்துக்கொள்ளப்பட்டது!

ரசனைக்காரன் பாட்டுப் பட்டியல் 2009

Filed under: சினிமா — rasanaikaaran @ 9:27 pm

குறிப்பு:

** இந்த படங்கள் 2008 ஆம் ஆண்டு டிசம்பரில்  வெளியாகிவிட்டாலும் பட்டியலில் சேர்த்துக்கொள்ளப்பட்டது!

விமர்சனக் குழு: ரசனைக்காரன், அக்க்ஷயா குருஷேவ், சகானா நாச்சியார்

November 7, 2009

அமீரின் யோகி.. சிறப்பு திரை முண்ணோட்டம்.

Filed under: சினிமா — rasanaikaaran @ 5:46 pm
Tags:

இயக்குனர் அமீர் திரைக்கதை, வசனம் எழுதி முதல் முறையாக கதாநாயகனாக நடித்து, யுவன் அழகான இசையில், சுப்பிரமணியம் சிவா இயக்கத்தில் வெளிவர இருக்கும் “யோகி” படத்தின் திரை
முண்ணோட்டம். அமீரின் இந்த இரண்டு வருட உழைப்புக்காக தமிழ் திரைத்ரசிகர்கள் காத்துக்கிடக்கின்றனர்..

Thamizhans’ got talent

Filed under: 1 — rasanaikaaran @ 3:42 pm

வார்த்தைகள் இல்லை என்னிடம்….

October 25, 2009

padithathu..rasithathu..

Filed under: பொழுதுபோக்கு — rasanaikaaran @ 4:22 am
Tags:

1606967

நண்பன் வெங்கி எழுதியதில் படித்து ரசித்தது..

அன்பே சிவம்..
ஆனால்
கையில் ஆயுதம்!

September 19, 2009

அடி விழும்!

Filed under: 1 — rasanaikaaran @ 3:12 am

Eelammap_10_03

பதிலுக்கு மட்டுமல்ல
கேள்விக்கும் சேர்த்தே
அடி விழும்!

மீண்டும்
தமிழீழம் எழும்!

…..வர்மனின் எழுத்துகளில் உயிரான வரிகள்.

February 11, 2009

நான் கடவுள்…ஒரு திறனாய்வு அலசல்

Filed under: சினிமா — rasanaikaaran @ 11:57 am
Tags:

vmain-copy

நான் கடவுள்…?

அது இல்லை.. இது இல்லை..
அதனால்.. இதனால் படம் சரியில்லை..
மூன்று வருடம் உழைத்தற்காக வேண்டுமானால்..
அகோரமாக காட்டியதற்காக வேண்டுமானால்..
விளும்பு நிலை மனிதர்களை நடிக்க வைத்தற்கு வேண்டுமானால்..

பாலாவையும், அவரின் நான் கடவுளையும் பாராட்டலாம்!
என்று பல blogகளில் விமர்சனங்களாக எழுதப் பட்டு இருந்தது..

அவை அவரவரின் விமர்சனப் பார்வை..

நாங்கள் நான் கடவுளைப் பற்றி பொதுவான விமர்சனமாக எழுதாமல்…

அவற்றை வேறு விதமாக அணுகியுள்ளோம்.. அதில் சிலர் எழுதிய பொதுக் கருத்தையும், பலரின் உடன்படாதக் கருத்துகளையும் ஒரு சேர இணைத்து, ஒர் திறனாய்வு அலசலாக நான் கடவுள் திரைப்படத்தினை பற்றி தமிழகத்தின் மூத்த நாடகக் கலைஞர், விமர்சகர், தமிழ்ப் பல்கலைகழகத்தின் நாடகத் துறைப் பேராசிரியர் மு. ராமசாமி, அவர்களிடத்தில் அலசியிருக்கிறோம்..

இது ஒரு ஆடியோ உரையாடல்.. அய்யா அவர்களிடம் கேட்கப்பட்ட கேள்விகள்… கீழே..

அலசல் 1..

1. நான் கடவுள் பற்றி?

2.விளிம்பு நிலை மனிதர்களை மட்டுமே பாலாவின் அனைத்துப் படங்களும் பேசுவதாகப் பார்வையாளர்கள் கருதுகிறார்கள்?

3.தமிழ் சினிமாவின் சாம்பிரதாயக் கோட்பாடுகளான ஹீரோ ஹீரோயின் கதாபாத்திரங்களை முன்னிறுத்திக் கதை சொல்லாமல்.. எதிர்மறை வாழ்வியலைக் காட்சியாக்குவது தான் பாலாவின் விருப்பமா?

அலசல் 2..

4.பாலாவின் முந்தையப் படங்கள் போல் இல்லாமல் கதாநாயகனுடைய (ஆர்யாவின்) கதாபாத்திரம் வலிமை இல்லாமல் குறைந்த ஆளுமைக்கு உட்பட்டு.. மொத்தக் கதையின் முடிவிற்கு எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாமல் போகிறதாகப் பார்வையாளர்கள் உணர்கிறார்கள்…

5.படத்தின் பிற்பகுதியில் பல காட்சிகளில் தொடர்பு இல்லாமல் இருப்பதாக ஓர் உணர்வு ஏற்படுகிறது..குறிப்பாக அம்சவல்லி மாதாகோயில் காட்சியும் அதற்கு அடுத்த காட்சியிலே அவர் அகப்பட்டுக்கொள்வதாக அமைத்துள்ள காட்சியும் முற்றிலும் தொடர்பு இல்லாதவாறு தோன்றுகிறதே?

6.ஜெயமோகனின் ஏழாவது உலகத்தின் சில உணர்வுகளை எடுத்து கொண்ட பாலாவின் இந்தப் படம் பெரிதாக எதையோ இழந்து இருப்பதாகவும்… அதற்கு ஏழாவது உலகத்தையே எடுத்திருக்கலாமே என்றும் சிலர் கருதுகிறார்கள்…

அலசல் 3..

7.புதியப் பாடல்களைப் பயன்படுத்தாமல் பாலா அதிகமாகப் பழையப் பாடல்களை பயன்படுத்துவதைக் குறித்து?

8.இளையராஜா….தொழில் நுட்பக் கலைஞர்கள் பற்றி?

அலசல் 4..

9.வசனம்… ஜெயமோகன்?

10. படத்தைப் பற்றிய உங்கள் கருத்தினைப்  பாலாவிடம் கூறுனீ ர்களா?


இது நாள் வரையுமான திரைப்படம் சார்ந்த அனுபவங்களும், வாழ்வியல் அனுபவங்களும் எங்களுக்குள் உருவாக்கியிருகிற பார்வையின் வெளிப்பாடே இத்திறனாய்வு அலசல்.

….ரசனைக்காரன்


February 8, 2009

நான் கடவுள் திரை பாடல்கள்

Filed under: வீடியோ — rasanaikaaran @ 7:29 am
Tags: , ,

பிட்சை பாத்திரம்

ஓம் சிவ ஓம்

February 6, 2009

பாலாவின் நான் கடவுள் படத்தின் நேரடி தியேட்டர் ரிப்போர்ட்…

Filed under: சினிமா — rasanaikaaran @ 8:35 am

nkimages

ஒரு படம் எடுத்து மக்கள் மனதில் இடம் பிடிப்பது  என்பது சமீபத்தில் பெரிய விஷயம்..

கோடீஸ்வரன் முதல் தெருகோடியில் வாழ்பவனையும் ஒரே உணர்வில் இணைத்து விடும் வல்லமை சினிமாவுக்கு மட்டுமே உண்டு. அவ்வாறான சினிமாவை எடுக்கக்கூடிய வித்தை தெரிந்த இயக்குனர் பாலாவின் நான் கடவுள் படத்தின் நேரடி தியேட்டர் ரிப்போர்ட்…

முடிஞ்சா இது மாதிரி படம் எடுங்க… இல்லேன்னா கோயில் வாசல்ல போய் பிச்சை எடுக்க சொல்லுங்க அந்த so called popular tamil directors -ச!
…கல்லூரி மாணவன்.

ஜீரணிக்க முடியலைங்க.. படம் மிரட்டியிருக்காரு பாலா..
…ஆட்டோ ஓட்டுனர்.

Its completely a cult movie of recent times(even in recent decades of indian cinema)..
…திரைமொழி படிக்கும் மாணவன்.

மனநலம் குன்றியவர்களை படத்தில் உன்னத கலைஞர்களாக வாழவைத்திருகிறார் பாலா!
…நாடக நடிகர்.

இந்த ஆளால மட்டும் தான் இப்படி படம் எடுக்க முடியும்.. போட்ட லீவ்வுக்கும் கொடுத்த காசுக்கும் அர்த்தம் தரக்கூடிய படம்.. அவ்ளோ தான் சொல்ல முடியும் இப்போ.. மனச கசக்கிட்டாங்க பாலா..
…சாப்ட்வேர் எஞ்சினியர்.

இந்த படம் ஓடலைன்னா இனிமே தமிழ் சினிமாவுல படம் எடுக்கிறதே வேஸ்ட்!
…சென்சார் போர்டு அதிகாரி பாபு ராமசுவாமி ( இந்த தகவல் மட்டும் ஏற்கனவே படத்தின் ஒலிநாடா வெளியீட்டு விழாவில் பாபு ராமசுவாமி சொன்ன செய்தியை யூகி சேது பகிர்ந்து கொண்டது..)

தற்போதைக்கு இத்துடன் முடித்து கொள்கிறோம்..
விரைவில் விமர்சனத்துடன்..

February 3, 2009

பீதோவன் of ஆசியாவின் இத்தாலி இசைப்பயணத்தில்

Filed under: இசை — rasanaikaaran @ 1:30 am
Tags: , ,

(இளையராஜா ) பீதோவன் of ஆசியாவின்
இத்தாலி இசைப்பயணத்தில்
இசைஞானி இசைத்தது..
ரசனைக்காரன் ரசித்தது..

Next Page »

Blog at WordPress.com.