ரசனைக்காரன்

December 29, 2008

வாழ்வியல் கீர்த்தனைகள்! (2)

Filed under: வாழ்வியல் — rasanaikaaran @ 9:55 pm

என் ஜாதி தமிழ் ஜாதி!
என் மதம் மனிதம்!
என் குலம் இந்தியன்!
என்ற அடையாளங்களுடன்
பெருமை பேசி
வாழும்
நாடோடி நான்!

(ரசனைக்காரன் வாழ்வியல் பைபிள்லில் எழுதியிருந்தது!)

வாழ்வியல் கீர்த்தனைகள்! (1)

Filed under: வாழ்வியல் — rasanaikaaran @ 9:42 pm

உண்ண உணவு..
உடுக்க உடை..
இருக்க இடம்..
புதிதாக..
ஒட்டு போடும் உரிமை!?
இது எதுவுமே இல்லாத
இந்திய அன்னாடங்கட்சி யாக!
58 ஆண்டுகளை கடந்த
குடியரசு இந்தியாவில்?!

December 27, 2008

எங்கள் திரைவிமர்சனங்களை பற்றி தெளிவுபடுத்திவிடுகிறோம்!

Filed under: சினிமா — rasanaikaaran @ 1:11 am
Tags: , , , ,

ரசிகர்கள், எங்கள் சந்தோசத்திற்காக  உயிரையும் கொடுத்து கஷ்டப்படும் கலைஞனுக்கு, எங்கள் விமர்சனங்களை பற்றி தெளிவுபடுத்திவிடுகிறோம்!

திரைவடிவத்தின் இலக்கணங்களை படித்தோ, திரைப்படங்களில்  பணியாற்றிய  அனுபவத்திலோ ரசனைக்கரானில் திரைப்படம் குறித்த விமர்சனங்கள் எழுதப்படவில்லை.

பிறகு?..

விமர்சனம் எழுத உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது? என்ற கேள்வியெல்லாம் எங்களிடம் கேட்க கூடாது!  அது இல்லாதவர்கள் தான் இதுவரை அதிகம் பேர் எழுதிவருகிறார்கள் என்கின்ற அடிப்படைப் பத்திரிகை விதிகளில் சிக்கிகொலாமல் இந்த blogலே எழுதவும் முயற்சித்திருக்கிறோம்!

கண்டிப்பாக திரைப்படங்களுக்கு மார்க் போட்டு மானபங்கப்படுத்த மாட்டோம்! இந்த இடத்தில்  இயக்குனர் அமீர் சொன்னது போல நூற்றுக்கு நூறு மார்க் வாங்கும் படம் எடுப்பதை எங்களுக்கு  கற்று கொடுங்கள்! என்று ஆனந்த விகடனை (மார்க் போட்டு பிசினஸ் நடத்துவற்காக) அரைந்ததையும் மறக்காமல் நின்னைவில் கொண்டுள்ளோம்.

எங்கள் வேலை சுமைகளையும் தாண்டி, கஷ்ட நஷ்டங்களை மறக்க நீங்கள் காட்டும்  கனவுலோகத்தில் கலந்து சந்தோசத்தையும், பல விதமான உணர்வுகளை தேடி, பல சமயம்  Blackலே கொள்ளையடிக்கப்பட்டு, உங்கள் திரைப்படைப்பை காண ஓடோடி வருகிறோம்..

ஒரு சராசரியாக  வாழும் இந்திய பாமர மக்களின் ரசனையில் வெளிவரும்..
ரசனையாக..

உங்கள் படைப்பு உள்ளத்தை வருடும் உணர்வுபூர்வமகவோ.. அல்லது
எங்கள் அறிவுக்கு எட்டக்கூடிய செய்தியாகவோ இருந்தால்..அல்லது
குறைந்தபட்சம் பொழுதை சந்தோசமாக கழிக்கும் ஜனரஞ்சகமான படமாகவோ இருந்தால்!

அது   எங்களுக்கு பிடித்திருந்தால்.. நல்லாயிருக்குன்னு வாழ்த்தி வரவேற்போம்!
இல்லையென்றால்..

எங்களுக்கு பிடிக்கவில்லை! என்ற அடிநாதம் தவறாமல், பூசி மொழுகாமல்..தேவைப்பட்டால் கொஞ்சம் அலசியே கிழிப்போம்!

உங்களுக்கு காசு கொடுக்கும் எஜமானர்கள் என்ற தோரணையில் கண்டிப்பாக  இல்லை!
ரசிகர்களாகிய நாங்களும் உங்களில் ஒருவர் என்ற உரிமையில்..

இயங்குனர்களே! நடிகர்களே! இவர்களை இருவரையும் ரசித்து  பின்பற்றும் ரசிகர்களே!
தவறாக நாங்கள் விமர்சனம் எழுதி இருந்தால்.. காரணம் சொல்லி எங்களுக்கு புரிய வையுங்கள்.. நாங்களும் புரிந்துக்கொள்ள தயாராக இருக்கிறோம்! ஏனென்றால் நமது மனநிலைகள் மாறுபட்டு இருக்கலாம்! அதற்காக!

எழுதியது பிடித்திருந்தால்.. சிந்திக்கும் அளவுக்கு பெரிதாக நிச்சயம் இருக்காது..
முடிந்தால் விமர்சனங்கள் படித்தும்,  படமும் நன்றாக இருந்தால் அத்திரைபடத்தை  பார்த்தும் ரசியுங்கள்!

நன்றி!

என்றும் அன்புடன்
ரசனைக்கரனுகாக எழுதி கிழிக்க துவங்கும்
உங்கள்
தர டிக்கெட்!

December 20, 2008

தமிழ் சினிமா?

Filed under: சினிமா — rasanaikaaran @ 10:10 pm

அண்ணாச்சி திரு. கமல் ஹாசன் கூறியது போல இனிமேல் தமிழ் சினிமா உலகை, கோலிவுட் என்று அசிங்கமாக அழைக்காமல் ‘தமிழ் சினிமா’ என்றே பெருமையாகவே கூறுங்கள்!

ஏன் என்றால் நமக்கு கிடைத்த, கிடைத்திருகின்ற ஜாம்பவான்களை போல இந்தியாவில் வேறு எங்குமில்லை.. ஆனால் அதனால் தமிழ் சினிமா சாதித்தது என்ன?

ஒன்று.. இரண்டு..மூன்று…ஹூம் நான்கு என்ற இந்த வரிசையில் சின்ன பிள்ளைகள் விரல்விட்டு எண்ணக்கூடிய திரைப்படங்களை எடுத்ததற்கு கண்மூடித்தனமாக மார்தட்டி கொள்ளலாம் என் தமிழர்களே!

அவைகளில் பராசக்தி, அபூர்வ ராகங்கள், 16 வயதினலே, முள்ளும் மலரும், அவள் அப்படி தான், உதுரிப்பூக்கள், வீடு, சந்தியா ராகம், மோகமுள், பொற்காலம், சேது, அழகி, பிதாமகன், ஒன்பது ரூபாய் நோட்டு, வெயில், பூ ஆகிய சில படங்களை மட்டும் தான் ஆச்சு அசல்லான தமிழ் சினிமாக்கள் என்று நம்முடைய  திரை சீலைகளில் மட்டுமில்லை உலக திரை சீலைகளிலும்  அலங்கரிக்கும்..நம் கற்பனை திறணை..

தொழில் நுட்பம்..அது  நமக்கு பெரிய வார்த்தை.. இப்போது!!

சரி..மீதி எடுத்தவை?!!

பலரின் குடும்பங்களை வாழவைத்திருக்கின்றன.. தொழில் நடத்தி, லாபம் பார்த்து, வாழ்வு அளிப்பது விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட பெரிய விஷயம்! அதற்காக வாழ்த்துக்கள் தான் சொல்ல வேண்டும்!

அதை விட்டுட்டு.. உலகில் முதல் முறையாக..ஹாலிவுட்டையும் பின்னுக்கு தள்ளி..தமிழனுக்கே பெருமை..இனிமேலும் அந்த புளிச்சு போன கதைகளை சொல்லுவதை நிறுத்துங்கள்!.. அப்படி சொல்லி எடுத்த பெருபாலான திரைப்படங்கள் ஹாலிவுட்டின் copyயல்ல உலக சினிமாவின் அப்பட்டமான மறுபதிவுகள்!

மானக்கேடு… அதற்கெல்லாம் மதிக்கதக்க இந்தியாவின் திரைப்படங்களுக்கான தேசிய விருது!

ஆனால் ஹாலிவுட் மற்றும் ஆஸ்கார் எல்லாம் தமிழர்களுக்கு நிலா தொடும் சாதனையல்ல இன்னும் அம்மாக்கள் ஆசைகாட்டும் நிலச்சோறு ஊட்டும் கதை தான்!

முக்கியமாக..

படிக்காதவர்கள் copy அடிக்கிறார்கள்..  (அப்பட்டமாக ஹாலிவுட் படங்களை பார்த்து)
படித்தவர்கள் பிட் அடிக்கிறார்கள்.. (திருட்டுதனமா ஜப்பானிய கொரியா ஜெர்மானிய முதலிய வெளிநாட்டு  படங்களை பார்த்து)

உங்கள்ளில் ஒருவருக்கொருவர் குறைகூரி மறுபிரதி,மறுபதிவு   எடுக்காமல்  ..உலக அரங்கில் மீண்டும் தமிழரின் மானதை வாங்காமல்.. (நிழல் +) உலகத்துகே தலைவர்கள் போல அரிதாரம் பூசி  வாழும் நிஜ கோமாளிகளை நம்பி அவர்கள் பின் பெருமை பேசி நிற்காமல்..

நமது இலக்கியங்களை ஆராயுங்கள், நம் தற்போதைய சமூகவியலை உற்று பாருங்கள்  உருவாகும் கலை..உலகமே அடிமையாகும் உங்கள் உலக சினிமாவிற்கு..

முடியாதது என்று ஒன்றுமில்லை,

கதையை நம்பி..கதையாசிரியர்களை நம்பி.. இயக்குனர்களை நம்பி..

முக்கியமாக தரமான படங்களை விரும்பும் உங்கள் ரசிகர்களான எங்களை நம்பி படங்கள் எடுங்கள்..

அப்படி முயற்சி செய்யுங்கள்..
திருவினையாகும் உலக சினிமாவில்..

தமிழ் சினிமா!

December 19, 2008

உறவின் முறை செய்திகள்…. எண் 2

Filed under: அரசியல் — rasanaikaaran @ 10:27 am

இப்படியே எத்தனை நாள் தான்
குடும்ப தகராறை வளர்த்துகொண்டே போவீர்கள்!

இப்ப விஷயம் ரோட்டுக்கு வந்துடுச்சு!

அடுத்த ‘கண்ட’வனும் நமக்கு
அறிவுரை சொல்ல வந்துடான்!

எத்தனை நாள் தான்..
நீ வெட்ட..
அவன் வெட்ட..
என இழுத்துகொண்டே போவீர்கள் ?!

புடிங்கட நம்ம பாகிஸ்தானை!
முடிங்கட நம்ம பங்காளி சண்டையை!

என நீண்ட நாளாய் காத்து இருக்கும்
இந்திய  அன்னடங்காட்சிகள் .

உறவின் முறை செய்திகள் (பக்கத்தில் கடன் வாங்கியது..பரவாவில்லை படியிங்கள்) எண் 1

Filed under: அரசியல் — rasanaikaaran @ 10:08 am

கிளிநொச்சி யுத்தத்தின் பலமும் பலவீனமும்: உலக யுத்த ஆதாரத்துடன் பி. இராமனின் ஆய்வு:

raman_1

இலங்கையில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் போரில் தமிழீழ விடுதலைப் புலிகள் தோல்வியடைந்தால் அது அவர்களின் தோல்விக்கான ஆரம்பம் எனக் கொள்ளலாம். அதேநேரம் இலங்கை இராணுவம் இந்தப் போரில் வெற்றி பெற்றால் அது மகத்தான வெற்றியாக இருக்கும் என…

இந்தியாவின் முன்னாள் மேலதிக அமைச்சரவை செயலரும், சென்னையில் உள்ள தென்ஆசிய ஆய்வு (றோ)மையத்தில் பணிப்பாளருமான பி. இராமன் தெரிவித்துள்ளார்.

நடைமுறைப்போரில் தமிழீழ விடுதலைப் புலிகள், நன்கு பயிற்சி பெற்ற போராளிகளை கொண்டு இராணுவத்திடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்களுடன் திடமான உறுதியுடன் போரிடுகின்றனர்.

இலங்கை இராணுவத்தினர் சீனா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளில் இருந்து கிடைக்கும் அதிகமான நிதியுதவிளை கொண்டு அதிகமான ஆயுதங்களை கொண்டிருக்கின்றனர்.

எனினும் அவர்கள் நன்கு பயிற்றப்படாத திடமில்லாத வீரர்களையே கொண்டிருப்பதாக இராமன் குறிப்பிட்டுள்ளார்

கடந்த வாரம் கிளிநொச்சியில் இடம்பெற்ற மோதல்களின் போது படைத்தரப்பு அதிக இழப்புகளை சந்தித்தது. இரண்டு தரப்பும் இந்த மோதல் குறித்து தமக்கு சாதகமான தகவல்களை வெளியிட்டன. எனினும் இறுதியில் படைத்தரப்பின் தகவல்களை காட்டிலும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தகவல் உண்மையானவையென புலனாவதாக இராமன் குறிப்பிட்டுள்ளார்

கிளிநொச்சியை முத்தமிடும் தூரத்தில் படையினர் இருப்பதாகவும் “கிளிநொச்சியை புதுவருடத்திற்கு முன்னர் கைப்பற்றுவோம்” என இலங்கையின் இராணுவத் தளபதி கூறியிருந்தமையை இங்கு சுட்டிக்காட்டியுள்ள இராமன், தற்போது சூழ்நிலையில் பயிற்றப்படாத இளம் வீரர்களை பயன்படுத்தி கிளிநொச்சியை முத்தமிடும் தூரத்தை அவர் அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். எனவே கிளிநொச்சி சாவை முத்தமிடும் இடமாகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

சரத் பொன்சேகாவின் உறுதிமொழியை ஒத்த உறுதிமொழியையே தென்கொரிய வடகொரிய யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது தென்கொரியாவின் தளபதி டக்ளஸ் மெக்ஆதர் தமது படைவீரர்களிடம் நீங்கள் கிறிஸ்மஸுக்கு வீட்டுக்கு செல்லலாம் என கூறியிருந்தார்.

எனினும் கிறிஸ்மஸ் வந்தது.கிறிஸ்மஸ் சென்றது. சீனாவும் வடகொரியாவும் தொடர்ந்தும் கடும் சண்டையில் ஈடுபட்டன. பொதுமக்கள் தென்கொரிய தளபதி கூறிய கிறிஸ்மஸ் எந்த கிறிஸ்மஸ் என கேள்வி  எழுப்பினர்.

இறுதியாக அந்த யுத்தம் எந்த தரப்புக்கும் வெற்றியோ தோல்வியோ இன்றி இரண்டு தரப்பிலும் பல ஆயிரக்கணக்கான  உயிர்கள் பலியானதுடன் முடிவடைந்தது என இராமன் சுட்டிக்காட்டியுள்ளார்.

கிளிநொச்சி யுத்தமானது, இரண்டாம் உலகப் போரின் போது ஸ்டாலிங்கார்ட் மற்றும் இல் அலமெய்ன் ஆகிய களமுனைகளில் நாசி படையினர் அடைந்த தோல்விகளுக்கு சமமானதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த இரண்டு சந்தர்ப்பங்களில் சோவியத் இராணுவம் பாரிய இழப்புக்களை சந்தித்ததென்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டாம் உலகப் போரின் திருப்பு முனைகளாக இந்த இரண்டு சந்தர்ப்பங்களும் வரலாற்றில் குறிப்பிடப்படுகிறது.

இல் அலமெய்னிற்கு பிறகு அடைந்த வெற்றியும் இல்லை, தோல்வியும் இல்லை என இல் அலமெய்னில் ரொமெலின் இராணுவம் அடைந்த தோல்வியை அப்போதைய பிரித்தானிய பிரதமர் சேர் வின்ஸ்டன் சேர்ச்சில் விபரித்திருந்தமையையும் இராமன் சுட்டிக்காட்டியுள்ளார்

அன்னாடங்காட்சி .. எண் 3

Filed under: அரசியல் — rasanaikaaran @ 7:42 am

ஒட்டு கேட்பதும்..
ஓட்டு கேட்பதும்..

இரண்டுமே
(காங்கிரஸ்)
ஆட்சியாளர்களின் பண்பு!

ஒட்டு கேட்பது..
தெரிந்தும் அவர்களுக்கே
ஓட்டு போடுவது..

இந்திய
மாக்களின் இயல்பு!

என்ற தீவிர சிந்தனையில்
அன்னாடங்காட்சி!

செய்தி : காங்கிரஸ் இரண்டு மாநிலத்தில் வெற்றி

அதையும் நம்ம அன்னாடங்காட்சியின் பார்வையில்…

டெல்லி – மீண்டும் நல்லாட்சி தருவோம் என்று பிச்சை எடுத்தது!
ராஜஸ்தான் – நல்லாட்சி தருவோம் என்று அடுத்தவர்  பிச்சை  தட்டில் பிடிங்கி தின்றது!
மொத்ததில்  பிட்சை கட்சி வென்றது! மன்னிக்கவும்  காங்கிரஸ்  கட்சி வென்றது!

December 18, 2008

அன்னாடங்காட்சி..

Filed under: அரசியல் — rasanaikaaran @ 11:45 pm

சோத்துக்கே வழியில்லை
சொர்கத்துக்கு வழிக் கேட்கிரானுங்க

மெத்த படித்த மேதாவிகளும்
சொரண்டி திங்கும் அரசியல்வாதிகளும்..!

இப்படிக்கு
வாழ்க்கையை  பகுத்தறிந்த
அன்னாடங்காட்சியாக
வாழும்
என் இந்திய குடிமக்கள்

ரசனைக்காரன்

Filed under: வரவேற்பறை — rasanaikaaran @ 10:52 pm
Tags: , , , , ,

தமிழன் என்றால் ரசனைக்காரன் என்பது வரலாறு..

முப்போகம் கண்ட சோழ வள நாடு விவசாயம், போர், கலை இம்மூன்றுக்கும் சோழ தமிழர்கள் தங்கள் வாழ்வியலை அற்பணிப்த்துள்ளனர். அதிலும் குறிப்பாக ராஜராஜ சோழன் காலத்தில் போர்கள் அதிகம் நடந்தேரினாலும் சோழர்கள் கலைக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுத்தனர் என்கிறது வரலாற்றின் சுவடுகள்.

தெருக்கூத்தாககட்டும், தியாகராஜா ஆராதனையாகட்டும், symphonyயாகட்டும் அடி பிறழாமல் தாள தட்டுக்கு ஏற்ப தஞ்சாவூர்க்காரன் தன் தொடையில் தாளம் தட்டுவான்.. அப்போது மட்டுமல்ல இப்போதும்!

ரசனைக்காரன் என்றால் பாண்டியர்கள், சேரர்களை காட்டில்லும் கலையை அதிக ஆர்வத்துடன் வளர்த்தவர்கள் சோழர்களே என்று இலக்கியங்கள் கூறுகிறது. சோறும், சண்டையும் முடிஞ்ச பிறகு கூத்து தான் வாழ்கைன்னு திரிஞ்ச பயளுக, அவனுங்க தான். எந்த கலையையும் தவறாக…. இல்லை சற்று பிசகினாலும் விமர்சனம் செய்து கிழிக்கும் இசையறிவும் கலையரிவும் மிகுந்தவர்கள் அவர்கள். இப்படியும் வைத்துகொள்ளலாம் தமிழகத்தின் பெரும்பாண்மை பகுதிகளை சோழர்கள் ஆண்டதால் தமிழர்கள் அனைவருமே ரசனைக்காரர்களே!

அப்படி பட்ட தமிழ் மண்ணில் பிறந்த எனக்கு கலை பற்றி அதிகம் தெரிந்திருக்காவிட்டாலும் பாமர மக்களை மெத்த படித்தவர்கள் கூறும் அடைமொழிகலான ஒரு தர டிக்கெட் அளவுக்கும், ஒரு விசில் அடிச்சன்குஞ்சு அளவுக்கும் நான் ரசித்தவைகளை உங்களுடன் பகிர்ந்துக்கொள்கிறேன்!

நான் எழுதும் ரசனைகள் பிடித்திருந்தால் ஏற்றுகொள்ளுங்கள், பிடிக்காவிடின் எனக்கு மறுத்து எழுதுங்கள் ரசனைக்காரர்களே!

இல்லாத இறைவன் அருளுடனும்

இருக்கும் உங்கள் அன்புடன்

ஆரம்பிக்கின்றேன்

என்னுள்ள ரசனைக்காரனை!

Hello world!

Filed under: வாழ்வியல் — rasanaikaaran @ 9:00 am

Welcome to WordPress.com. This is your first post. Edit or delete it and start blogging!

Create a free website or blog at WordPress.com.